Header Ads

Header ADS

உதவி பேராசிரியர் பணிக்கான 'ஸ்லெட்' தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

உதவி பேராசிரியர் பணிக்கான 'ஸ்லெட்' தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கான மாநில தகுதி தேர்வுக்கு (ஸ்லெட்) திங்கட்கிழமை (ஏப்.1) முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர 'நெட்'(தேசிய தகுதித் தேர்வு) அல்லது 'செட்'(மாநிலத் தகுதி தேர்வு) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழகத்தில் 'செட்' தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு செட் தேர்வுக்கான அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம் உள்பட மொத்தம் 43 பாடங்களுக்கான ஸ்லெட் தகுதி தேர்வு ஜூன் 3-ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் www.msutnset.com என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

👇👇👇👇👇👇



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.