TAMNEWS: NEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP
Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

Friday, June 9, 2023

Thursday, March 17, 2022

டிட்டோஜாக்" என்று அழைத்தாலே தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் உள்ளக்குமுறல்களின் பிரதிபலிப்பு வடிவமைப்பாகும்.. டிட்டோஜாக் பதாகையை ஒரு நிமிடம் கூட காலம் கடத்தாமல் உயர்த்திப் பிடிப்போம்... வாருங்கள்... ஒன்றுபடுவோம்.வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அழைப்பு

March 17, 2022 0

 *17.03.2022*


*தமிழக ஆசிரியர் கூட்டணி*

*அரசு அறிந்தேற்பு எண் 36/2001*

--------------------------------------------------------


*"டிட்டோஜாக்" என்று அழைத்தாலே தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் உள்ளக்குமுறல்களின் பிரதிபலிப்பு வடிவமைப்பாகும்.. டிட்டோஜாக் பதாகையை ஒரு நிமிடம் கூட காலம் கடத்தாமல்  உயர்த்திப் பிடிப்போம்...  வாருங்கள்... ஒன்றுபடுவோம்...*


  *ஆசிரியர் சங்கங்களுக்கு ஆதரவுக் கரங்கள் அவரவர் இயக்க உறுப்பினர்களே ஆவார்கள்... யார் மீது நம்பிக்கை வைத்து இனியும் பொறுமைக்கு ஒரு சோதனையை ஏற்படுத்த வேண்டாம். நாளை தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு கொள்கை முடிவு எடுத்தால் மனம் குளிர வரவேற்போம். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு கொள்கை குறிப்பில் இடம் பெற்றால் உளமாற வரவேற்போம். முந்தைய ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கட்டமைப்பினை திருத்தி அமைத்து மீண்டும் தொடக்கக் கல்வித் துறையை  தனித்துறையாக இயங்கும் என்ற மறுமலர்ச்சி அறிவிப்பு வெளிவருமேயானால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் செயல்பாட்டில் நம்பிக்கை வைப்போம். 33 ஆயிரம் கோடி  கல்வித்துறைக்காக  ஒதுக்கப்பட்ட நிதியில் 31 ஆயிரம் கோடி ஆசிரியர்களின் ஊதியத்திற்காகவே  செலவிட்டு வருகிறோம் என்று எப்போது? ஊடகங்களுக்கு பேட்டி அளித்தாரோ?  அன்றே நமது நம்பிக்கை சிதறிப்போனது.* 


*மாணவிகளுடைய மாதாந்திர இயற்கை பாதிப்பினை ஆசிரியர்கள் கேட்பதும், மாணவர்களுடைய சிறுநீர் தன்மை குறித்து ஆசிரியர்கள் கேட்டு தெரிந்து கொள்வதும் தவறில்லை என்றும், மருத்துவத்துறையில் சொன்னதைத்தான் நாங்கள் செய்கிறோம்.  இதுபோன்ற கேள்விகளை தவிர்க்க முடியுமா? என்று ஆலோசித்து வருகிறோம்.  எமிஸ் இணையதள பணிச்சுமையால்  ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் தொடங்கி நடத்துவதற்கு இயலாத பரிதாப நிலையே தொடர்கிறது. எமிஸ் இணையதள சுமையால் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு நேரம் இல்லை என்று செய்தியாளர்கள்  கேள்வி கேட்டால், ஆசிரியர்கள் சொல்வதையும் உணர்கிறோம்... எமிஸின் முக்கியத்துவத்தையும் உணர்கிறோம்... என்கிறார்.*

*கிராமத்தில் இதை கருப்பூர் பஞ்சாயத்து என்பார்கள். ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாத காலம் ஆகப் போகிறது. இதுவரையில் தொடக்கக் கல்வித் துறையை கூட தனியாக பிரித்து அறிவிப்பு வெளியிடப்படாத  மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை நாம் பெற்றிருக்கிறோம். மிகவும் நல்ல மனிதர்; யாருடைய வருத்தமும் வந்துவிடக்கூடாது என்று நெளிவு சுளிவுடன் பள்ளிக்கல்வித்துறையை  நடத்தி வருகிறார். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை பொறுத்தவரையில் பள்ளிக்கல்வித்துறையை மூன்று ஐ.ஏ.எஸ்  அதிகாரிகளிடம்  நம்பிக்கையுடன் ஒப்படைத்து விட்டு அவர்களது விசாலப் பார்வையால்  இந்திய திருநாட்டினையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார் பெருமிதம் கொள்கிறோம்.*


 *இழந்த பொருளாதார இழப்பினை மீட்டெடுப்பதைக் காட்டிலும், வீரம் செறிந்த, போர் குணத்திற்கு சொந்தக்காரர்களான தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் சுயமரியாதையினை, தன்மானத்தினை ஒவ்வொரு நிமிடமும் நாம் இழந்து கொண்டு இருக்கிறோம். என்பதனை நாம் எண்ணினால் ரத்தம்  சூடேறுகிறது. குருதி ஓட்டத்தில் கொந்தளிப்பை காணமுடிகிறது. மே 13 வரையில் பள்ளி என்றார்கள் இனி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ஆசிரியர்களுக்கு வேலை நாள் என்ற உத்தரவை போடாமல் கூட்டம் என்ற பெயரில் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள். கொரனா தொற்றிலிருந்து தமிழ்நாடு காப்பாற்றப்பட்டுவிட்டது. ஆனால் எமிஸ் இணையதளத்திலிருந்து ஆசிரியர்களையும், மாணவர்களையும் காப்பாற்றப் போவது யார்?*


 *பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவிக்கு ஆணையர் என்ற பொறுப்பினை ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர் ஆணையிட்டால் அனைத்தும் நடக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு ஆசிரியர்கள் மத்தியில் செயல்பட்டு கொண்டு வருகிறார். திட்ட இயக்குனர் பொறுப்பில் ஒருவர் இந்திய ஆட்சிப்பணி பொறுப்பில் உள்ளார். பொறுப்புகள் வேறுவேறாக இருந்தாலும் ஆசிரியர்களை பழிவாங்குவதற்கு என்னவெல்லாம் திட்டம் தீட்ட முடியுமோ? நண்பகல் இடைவேளையில் கூட சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். நமக்குத் தெரிந்த வகையில் ரஜினி ஸ்டைலப் போல "ஆண்டவன் சொல்கிறார்.. அருணாச்சலம் கேட்கிறார்கள்.."  என்று தெரிகிறது. தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில் பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து புதிய நியமனம் செய்து விட்டார்கள்.  நமது குடும்பத்துப் பிள்ளைகள் ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் அவர்கள் படும் வேதனையை நம்மைத் தவிர வேறு யாரால்? பிரதிபலிக்க முடியும்? இரண்டு மாதம் கூட இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுமதிக்காத இவர்கள் செய்கிற பாவச்செயல் இவர்களை எந்த விதத்திலாவது பாதிப்பு ஏற்படுத்ததான் செய்யும். இவர்களுடைய உள்நோக்கமே தலைவர் கலைஞர் அவர்கள் சம்பாதித்து வைத்துள்ள  வாக்கு வங்கியை அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் முற்றிலும் சேதாரப்படுத்தி விடுவதுதான் என்று உறுதி எடுத்துக் கொண்டு  செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் எதிர்பார்த்தால் உள்ளும், புறமும் ஆதார்த்துடன்  எழுதி வெளியிட  தயாராக உள்ளோம். 1985 ஜாக்டீ போராட்டத்தில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு ஆசிரியர்கள் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள் என்ற உணர்வினைப் பிரதிபலிப்பதற்காக ஜாக்டீ போராட்டத்தினை நடத்தினோம். பத்தாயிரம் பெண் ஆசிரியர்கள் உடபட 60 ஆயிரம் பேர்  41 நாள் சிறை தியாகம் செய்தவர்கள்.. 50 க்கும் மேற்பட்டவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். இவர்கள்  சிறைச்சாலைகளில் இருந்த போது தந்தை இறந்த போதும், தாய் இறந்த போதும்,  மகனை, மகளை பறிகொடுத்த போதும் ஜாமீனில் வெளி வர மறுத்து சிறையில் இருந்தவர்கள். சிறையில் இருந்த அந்த வீர தியாக திருமகன்களின் கரங்களை எடுத்து கண்களில் ஒத்திக்  கொள்கிற போதாவது நமக்கு  அந்த நினைவலைகள்  திரும்பாதா? தலைவர் கலைஞர் அவர்களும் இனமான பேராசிரியர் அவர்களும் கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மற்றும் உள்ள அன்றைய எதிர்க்கட்சி தலைவர்களும் கரம் கொடுத்து ஆதரித்தார்கள் என்பதை மறுக்கத்தான் முடியுமா? 1988 ஜாக்டீ- ஜியோ போராட்டத்தில் மவுண்ட்ரோடு முற்றுகையில் ஈடுபட்டு குதிரைப் படைகளை எதிர் கொண்டவர்களில் பெரும்பான்மையோர்  தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்பதை மறுக்கத்தான் முடியுமா? 1985-88 போராட்டங்களை ஆதரித்த தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் அரசுஊழியர்களுக்கு இந்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை ஊதியக் குழுக்கள் மூலம் முதன் முதலாக நிர்ணயம் செய்து அறிவித்தவர் தலைவர் கலைஞர்  அவர்கள் தான்  என்பதனை நம் நினைவை விட்டு அகற்றி விடத்தான் முடியுமா?   பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப மீட்டெடுப்பதற்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்ற கோரிக்கை உட்பட 2003 ல் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஒன்னே முக்கால் லட்சம் பேர் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட போதும், 999 பேர் 8 மாத காலம் நிரந்தர பணிநீக்க காலத்தில் இருந்த போதும், நிலை குலையாமல்  போர்க்களத்தில் நின்ற நம்மைப் போன்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்கள் தலைவர் கலைஞர் அவர்களும், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் உட்பட  ஆசிரியர்கள் அரசூழியர்களின் பால் பற்றுதல் கொண்டிருந்த மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் தான்  என்பதை நெஞ்சில் நினைவலைகள் நம்மை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. இன்றைய நிலைமை "துச்சாதனன் துகில் உரிந்த போது இரு மருங்கிலும் பெரும் திரளாக நின்று மக்கள் கண்ணீர் வடித்தார்கள்.. தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை. இதனைக் கண்ட பாரதி "பெட்டை புலம்பல் பிறர்க்குத்  துணையாகுமோ"?  என்றார்..*


*பூங்கொத்து கொடுத்தது போதும், சால்வைகள் அணிவித்தது போதும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது போதும்...* *இனி சங்க உறுப்பினர்களின் சுய மரியாதையைக் காப்பாற்ற சங்கத் தலைவர்கள் முன்வரவில்லை என்றால் ஒவ்வொரு ஆசிரியர்களுடைய இதயத்திலிருந்தும் சங்கத் தலைவர்கள் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்... என்பதை உணர்ந்து செயல்படுவோம்... வாருங்கள்.. ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு என்றும் பிரிக்க முடியாதது. ஆசிரியர்கள்- சங்கங்களின் உறவு இதய மூச்சான உறவாகும்.*


 *கூடிப் பேசுவோம்... நேர்கொண்ட பார்வையால்... எடுக்கப்படும் நன்  முடிவால்... தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சுயமரியாதையைப் பாதுகாப்போம்...*


 *ஒரு மண்ணில் படர்ந்த  இயக்கக் கொடிகள் நாம்... உணர்ச்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கட்டும்... நம்மால் முடியாதது.. எவராலும் முடியாது... என்ற உறுதியுடன் ஒன்று கூடுவோம்... வேற்றுமைகளை மறப்போம்... ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சுயமரியாதையினை, தன்மானத்தினை ஒன்றுபட்டு  பாதுகாப்போம்...*



*ஒன்றுபட்டால் மட்டுமே நமக்கு வாழ்வுண்டு... இல்லையேல்... தாழ்வுதான்...தாழ்வுதான்.. மிஞ்சி நிற்கும்..*


*இந்தப் புலனப் பதிவு அனைத்து சங்கத் தலைவர்களின் உணர்வு நரம்புகளை முறுக்கேற்றி செல்லட்டும்..*


 *நாம் இன்னமும் இருக்கிறோம்... நம் உணர்வுகள் இன்னமும் சாகவில்லை... என்ற உணர்வுடன்...*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*

Tuesday, August 11, 2020