இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, April 1, 2024

இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு

இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு

பிளஸ் 2 வகுப்புக்கான விடைத்தாள் மதிப்பீடு திங்கட்கிழமை ஏப்ரல் 1 முதல் நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு கணக்கு ஆண்டுதோறும் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொது தேர்வு கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 22 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தத் தேர்வை தமிழக முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் உழைத்தால் மதிப்பீடு செய்யும் பணிகள் திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள் மதிப்பிடும் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது மதிப்பீட்டு முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன.

இதை எடுத்து மதிப்பீடு செய்யும் பணிகள் ஏப்ரல் 1-ல் தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

👇👇👇👇👇



No comments: