EMIS- மாற்றுச்சான்றிதழ் (T.C) full details
மாணவர்களின் T.C.யில் சாதி எழுதும் போது இது பயன்படும் .
கட்டாயம் ப்ரின்ட் எடுத்து சேர்க்கைப்பதிவேட்டில் வைத்துக்கொள்ளவும்.
ஒவ்வொரு சாதிக்கும் ஒரு எண் உள்ளது.அரசால் எண் கொடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுச்சான்றிதழ் (T.C)
EMISல் 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்வதற்கு முன்பாக கீழ்க்கண்டுள்ள படிவத்தில் மாணவர்களின் விபரங்களை பூர்த்தி செய்துகொண்டு onlineல் உள்ளீடு செய்ய வேண்டும்.
1)மாணவர்களின் அங்க அடையாளங்கள் இரண்டு.
2. கடந்த ஆண்டு மாணவருக்கு மருத்துவ முகாம் நடைபெற்ற தேதி
.3. மாணவர் எந்த வகுப்பிலிருந்து இந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
4. கடைசியாக மாணவர் பள்ளிக்கு வந்த தேதி.
5. மாணவர் பிறந்த தேதி
எழுத்தால் குறிப்பிட வேண்டும்.
6. பள்ளி அங்கீகார எண் தனியார் பள்ளிகளுக்கு உரியது.
7. Community என்பதில் refer the community certificate என click செய்யவும்.
8. மாணவர் TC கோரும் விண்ணப்பத்தில் உள்ள தேதியை உள்ளீடு செய்யவும்.
TC வழங்கும் தேதியை உள்ளீடு செய்யவும்.
இவை அனைத்தையும் type செய்து save செய்யவும்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை ) தலைமையாசிரியர்கள் , தங்கள் பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ( 5,8,10,12 ) மற்றும் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மா ற் றுச்சான்றிதழ் கொடுப்பதற் கான அனைத்து விவரங்களையும் EMIS வலைதளத்தில் Students Students TC details வழியாக மாணவர்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே Save கொடுக்கப்படவேண்டும் . Save கொடுக்கப்பட்ட பிறகு தவறுகள் இருப்பின் திருத்தம் செய்ய இயலாது
என்பதை தெரிவிக்கப்படுகிறது . ஆகவே உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக இருப்பதை தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே Save கொடுக்கப்படவேண்டும் . மாணவர்களை Common Pool க்கு மாற்றும் பொழுது மாற்றுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்தகவலை அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் முறையாக தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
click here to download Tc identification mark
No comments
Post a Comment