எமிஸ்-ல் பெயர் நீக்காததால் தேர்வு முடிவில் குழப்பம்
தமிழக அளவில் 12,690 பள்ளிகளில் படித்த 9,39,829 மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) படி 9,45,077 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிப்பதாக கணக்கில் உள்ளது.
இதனால், முடிவு அறிவித்த மீதியுள்ள 5,248 மாணவரின் முடிவுகள் என்ன ஆனது என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு தேர்வு துறை துணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தினர். அதில், 5248 பேர்களில் 231 இறப்பு, 4359 காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர், பள்ளியை விட்டு 658 பேர் விலகியது தெரிந்தது.
பள்ளியை விட்டு மாணவர் இடைநிற்றல், இறப்பு, மாற்று சான்றினை பெற்று விலகினால், அவர்களது விபரங்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) இருந்து உடனே நீக்க வேண்டும். பள்ளிகள் அதை செய்யாததால் குழப்பம் ஏற்பட்டது.
No comments
Post a Comment