கொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்? - ஓர் வழிகாட்டுதல்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 12, 2020

கொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்? - ஓர் வழிகாட்டுதல்!










குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலம் என இலக்கு எதுவாக இருந்தாலும், நிதித் திட்டமிடல் மூலம் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

எல்லோருக்கும், எதிர்காலத்தில் கல்வி, திருமணம், வீடு கட்டுவது, கார் வாங்குவது எனப் பல தேவைகள் இருக்கும். இதற்கு வாங்கும் சம்பளத்திலிருந்தோ, தொழிலிலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்தோ ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு சரியான நிதித் திட்டமிடல் அவசியம்.

'எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்' என நடிகர் வடிவேலு ஒரு படத்தில் நகைச்சுவையாகச் சொல்வார். திட்டமிட்டு செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும், அது வெற்றியடையும். அப்படித்தான், எதிர்கால இலக்குகளை அடைய நிதித் திட்டமிடல் ஒருவரிடம் இருந்தால், அவற்றை எளிதாக நிறைவேற்ற முடியும். குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலம் என இலக்கு எதுவாக இருந்தாலும், நிதித் திட்டமிடல் மூலம் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

நிதித் திட்டமிடலின் 5 நிலைகள்! - அடிப்படை அம்சங்கள்

நிதித் திட்டமிடலின் 5 நிலைகள்! - அடிப்படை அம்சங்கள்
இதுவரை எப்படியோ, கொரோனா நாள்களுக்குப் பிறகு வரவு செலவு விஷயங்களை சரி பார்த்து, சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடித்து, சரியான நிதித் திட்டமிடலுடன் எதிர்கால இலக்குகளை அணுக வேண்டும் என்பது நிதி ஆலோசகர்களின் அட்வைஸாக இருக்கிறது.


ஏன் முக்கியம்?

ஒருவரின் சம்பளம் அல்லது வருமானத்தைச் சரியாக முதலீடு செய்வதில், நிர்வகிப்பதில் நிதித் திட்டமிடல் முக்கியப் பங்காற்றுகிறது. நிதித் திட்டமிடல் மேற்கொள்வது மூலம் செலவுகளைக் குறைத்து, முதலீட்டை அதிகப்படுத்துவதுடன், வருமான வரியைக் கணிசமாகக் குறைக்க முடியும். பட்ஜெட் போட்டு செலவு செய்வதன் மூலம் உங்களின் பணவரத்தை எப்போதும் வலிமையாக வைத்துக்கொள்ள முடியும்.

காப்பீடும் இழப்பீடும்!
நிதித் திட்டமிடல்



நிதித் திட்டமிடலின் முதல்படியாக, காப்பீட்டுத் திட்டமிடல் இருக்கிறது. அதாவது, வருமானம் ஈட்டும் நபர்களின் பெயரில் ஆயுள் காப்பீடு பாலிசிகள் எடுப்பதும், குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஹெல்த் பாலிசிகள் எடுப்பதும் அவசியம். அப்போதுதான் திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கோ இன்ன பிற அசம்பாவிதங்களுக்கோ இழப்பீடு பெற முடியும். வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் அவரின் ஆண்டு வருமானத்தைப்போல் குறைந்தபட்சம் சுமார் 12 மடங்குக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது அவசியம்.


குடும்பத்தினர் அனைவருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதும் மிகவும் அவசியம். ஒட்டுமொத்தக் குடும்பத்தினருக்கும் குறைந்த செலவில் கவரேஜ் அளிக்கும் ஃப்ளோட்டர் பாலிசியை எடுப்பது நல்லது. இந்த பாலிசிக்கான கவரேஜ் ரூ.3 லட்சம் முதல் ரூ. 5 லட்சமாக இருக்கலாம். இதற்கு ஆண்டு பிரீமியம் 10,000 ரூபாய்க்குள்தான் இருக்கும்.

சேமிப்பும் செலவும்!

திடீர் செலவுகள் வந்தால், நம்மில் பலரும் கடன் வாங்கித்தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், உடனடி பணத்தேவைகள் உருவாகும்போது, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கையை எதிர்பார்க்காமல் இருக்க அவசரகால தொகையை அனைவரும் சேமித்து வைத்திருப்பது அவசியம். இது குடும்பத்தின் மாதச் செலவுகளைப்போல் சுமார் 5 - 6 மடங்காக இருக்க வேண்டும். இந்தத் தொகை இளம் வயதில் அதிகமாகவும், பணி ஓய்வுக் காலத்தை நெருங்கும்போது குறைவாகவும் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவும். இந்தத் தொகையை அவசரத்துக்கு எடுத்துச் செலவு செய்யும் விதமாக வங்கி சேமிப்புக் கணக்கு, எஃப்.டி, லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் போட்டு வைப்பது நல்லது.

அவசரகால தேவைகளுக்கு ஏற்ற திட்டம்! - கைகொடுக்கும் முதலீடு


அவசரகால தேவைகளுக்கு ஏற்ற திட்டம்! - கைகொடுக்கும் முதலீடு
சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம் எனப் பல செலவுகள் பிற்காலத்தில் வரிசைக் கட்டி வந்தாலும், முதலில் ஆரம்பிக்க வேண்டிய முதலீடு ஓய்வுக்காலத்துக்கானதுதான். காரணம். மிக அதிக தொகுப்பு தொகை (கார்ப்பஸ்) இதில்தான் இருக்க வேண்டும். அதே போல பிள்ளைகளின் திருமணம், கல்வி எனத் தனித்தனியாக முதலீட்டை மேற்கொள்ளலாம்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

* நம் சம்பளத்தில் குறைந்தது 10% முதல் அதிகபட்சமாக 30% வரை சேமிக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம். இப்படிச் சேமிப்பதை நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அதைவிட முக்கியம்.

* முதலில் பாசிட்டிவான மனநிலையைத் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். முடியாது, முடியாது என்று நினைத்தால், நம்மால் ஒரு ரூபாய்கூட சேமிக்க முடியாது. முடியும் என்று நினைத்து, சேமிக்கத் தொடங்கினால், நம்மால் நிச்சய மாக சில நூறு ரூபாய்களையாவது சேமிக்க முடியும்.

`கேரளாவை நம்பியே பிழைப்பு; வெளிநாட்டுப் பயணிகள் வருகை!’ - கொரோனா சுவடே இல்லாமல் சாதித்த லட்சத்தீவு


`கேரளாவை நம்பியே பிழைப்பு; வெளிநாட்டுப் பயணிகள் வருகை!’ - கொரோனா சுவடே இல்லாமல் சாதித்த லட்சத்தீவு
10% to 30%

"சம்பளத்தில் குறைந்தது 10% முதல் அதிகபட்சமாக 30% வரை சேமிக்க வேண்டும்."

* கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து, ஓர் ஓய்வு நாளில் ஆலோசனை நடத்துங்கள். அப்போது வரவு, செலவு விவரங்களில் தெளிவு கிடைக்கும். நிச்சயம் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, எதிர்காலத்துக்குச் சேமிக்க முடியும்.

* சிலர் அதிக தொகை இருந்தால்தான் முதலீடு செய்ய முடியும் என நினைக்கிறார்கள். மாதம் ரூ.100 இருந்தால்கூட ஆர்.டி, மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்..பி முறையில் முதலீடு செய்யலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சேமிப்பு
* எதிர்காலத்துக்கான சேமிப்பை நீங்கள் தொடங்குவதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன என்பது பற்றிய தெளிவான பார்வையையும், புரிந்து கொள்ளலையும் பெற்றிருக்க வேண்டும்.


* நம்மில் பலர் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் சொன்னார், மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் சொன்னார் என ஏதோ இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் பணத்தைப் போட்டு வருகிறோம். நல்லது சொன்னால் கேட்டுக்கொள்வதில் தவறில்லை. அவர்கள் அப்படிச் சொல்வதால், நமக்கு நல்லதா அல்லது அவர்களுக்கு நல்லதா என்பதை ஆராயாமல் முதலீடு செய்வதுதான் தவறு.

* எந்த முதலீடாக இருந்தாலும், குறைந்தது அதன் செயல்பாட்டை ஆறு மாதத்துக்கு ஒருமுறை கவனிப்பது அவசியம். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஒரு ஃபண்ட் அல்லது பங்கு சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் சிறிது இழப்பு என்றாலும், வேறு நல்ல திட்டத்துக்கு முதலீட்டை மாற்றிவிடுவது நல்லது.

சேமிப்பு மற்றும் முதலீடு... பணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வழிகள்!


சேமிப்பு மற்றும் முதலீடு... பணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வழிகள்!
* நீண்ட கால முதலீட்டில், முதலீட்டு இலக்கு நெருங்கிவரும் காலத்தில், ரிஸ்க்கான மற்றும் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்ட முதலீட்டைப் பாதுகாப்பான திட்டங்களுக்கு மாற்றிக்கொள்வது அவசியம்.

ஆக, ஒருவர் சரியாக நிதித் திட்டமிடல் செய்யும்பட்சத்தில், வாழ்க்கையின் பெரும்பாலான ரிஸ்க்குகளை எளிதாகச் சமாளிக்க முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.







No comments: