மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண், விடைத்தாள்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: |
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் , பிளஸ் 1 வகுப்பு விடுபட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலாண்டு , அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணும் , வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீதமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் , தனியார் , மெட்ரிக் , ஆங்கிலோ இந்தியன்
உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதல்வர்கள் தங்களது பள்ளியில் படித்த 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் கடந்த மார்ச் 21 ம் தேதி வரை முழுமையான ஆவணங்கள் இருக்கிறதா ? என்பதை சரிபார்க்க வேண்டும்.
மாணவர்கள் வருகைப் பதிவேடுகளை பிரிவு வாரியாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பு படித்து வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் , பாடத் தேர்வுகளை எழுத இருந்த மாணவர்களின் வருகைப்பதிவேடு பிப்ரவரி 29 ம் தேதி வரை முழுமையாக இருக்கிறதா என சரி பார்க்க வேண்டும். இதை ஒப்படைக்கும் போது மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும்.வருகைப்ப திவேட்டின் கடைசி பக்கத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் கையொப்பமிட வேண்டும்.
இவ்வாறு பெறப்படும் வருகைப்பதிவேட்டை , மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளி வாரியாக முத்திரையிடப்பட்ட உறையில் , தனித்தனியாக பாதுகாக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு இ - மெயிலில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1
வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான பொதுத் தேர்வு எழுத இருந்த மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் , விடைத்தாள்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து விவரங்கள் கேட்கும்பட்சத்தில் உடனடியாக அதை தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment