Header Ads

Header ADS

கொரோனா தீவிரம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் பேட்டி


மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனாதீவிரம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என முதல் வர் எடப்பாடி பழனிசாமிகூறினார். சேலம் மாவட்டம் , மேட்டூர் அணையில் இருந்து நேற்று , டெல்டா பாசனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்டபள்ளியில் இவ்வளவுகட்டணம் , கட்டச்சொல் கிறார்கள் என பெற்றோர் புகார் கொடுத்தால் தான் , அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க 
முடியும். முதலமைச்சராகிய நானே தெரிவிக்கிறேன் . பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் , அவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் , அந்தப் பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . பள்ளிகளை திறப்பது குறித்து , மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருக்கிறது.

அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப் பட்ட பிறகு , பள்ளிகள் படிப்படி யாக திறக்கப்படும். கொரோனா தொற்று இருக்கும்போது , இதை
அறிவித்தால் பிரச்னைகள் வரும். எனவே , தொற்று படிப்படியாக குறைக்கப்பட்ட பின் , கல்வி சம்பந்தப்பட்ட பிரச்னைகளையெல்லாம் ஆராய்ந்து அரசு முடிவு செய்து அறிவிக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.