இனி வங்கிகளில் கடன் பெறுவது கடினம்: ஏன்?
TAM-NEWS DISTRICT WISE WHATSAPP GROUP &MOBILE APP (APK)
வங்கிகளில் ஒருவர் கடன் பெறுவதில், சிபில் ஸ்கோர் முக்கிய பங்காற்றுகிறது. யாருக்கு, எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை நிர்ணயம் செய்ய அடிப்படை வருடமாக 2008-2009 இருந்த நிலையில், அதை கொரோனா பாதிப்பிற்கு பிறகு உள்ள ஆண்டாக மாற்ற, திட்டமிட்டு வருவதாக சிபில் அமைப்பு தெரிவித்துள்ளது.
2008-09-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கணக்கில் கொண்டு, ஒருவருக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என்ற அடிப்படை கடன் அளவு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ்
தாக்கம், பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடன் வழங்கும் அடிப்படை அளவை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சிபில் அமைப்பு தெரிவித்துள்ளது.
வங்கிகளில் சாமானிய மக்கள் பெறும் கடன்களை பொறுத்தவரை, பாதுகாப்பான கடன், பாதுக்காப்பற்ற கடன் என 2 வகை உண்டு. பாதுகாப்பான கடன்களில், வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவை வரும். பாதுகாப்பற்ற கடனில், தனிநபர் கடன், கிரெடிட் கார்ட் கடன் போன்றவை அடங்கும்.
இந்தியாவில், தனிநபர் மற்றும் கிரெடிட் கார்ட் கடன்கள் திரும்பி செலுத்தப்படாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், கடன் வழங்கும் அடிப்படையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிபில் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் இனி வரும் காலங்களில் வங்கிகள் கடன் வழங்குவதில் மிக கடுமையான நடைமுறைகளை பின்பற்றும் என தெரிகிறது.
No comments
Post a Comment