தீபாவளி முன்பணம் உயர்த்தப்படுமா போலீசார் எதிர்பார்ப்பு
சிவகங்கை, தீபாவளிக்கு வழங்கப்படும் முன் பணத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.போலீசாருக்கு ஆண்டுதோறும் தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.5 ஆயிரம் வீதம் முன்பணம் வழங்கப்படும். மாதந்தோறும் சம்பள பணத்தில் இருந்து ரூ.500 வீதம் 10 மாதங்களில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும். தீபாவளிக்கு முன்பணம் பெறுபவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த தொகையை பெற விரும்புவோரிடம் இருந்து பண்டிகை தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே விண்ணப்பங்கள் பெறப்படும்.இந்தாண்டு தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில், போலீசாருக்கு முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை.போலீசார் சிலர் கூறுகையில், தற்போது பள்ளி குழந்தைகளுக்கு 2 வது காலாண்டிற்கான கல்வி கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், இந்த மாதம் தீபாவளிக்கு குடும்பத்தினருக்கு புதுத்துணி வாங்குவது உள்ளிட்ட இதர செலவுகளுக்கு பெரிதும் சிரமப்பட வேண்டி உள்ளது.தெலுங்கானாவில் போலீசாருக்கு வழங்கப்படும் தீபாவளி முன்பணத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஆகவே எங்களுக்கு ரூ.10 ஆயிரமாக உயர்த்தி, மாதந்தோறும் ரூ.1000 வீதம் பிடித்துக்கொள்ள வேண்டும்,என்றனர்.
No comments
Post a Comment