சம்பளம் வாங்குறவங்களா நீங்க, முன் கூட்டி வரி கட்டுனா, ஒரு 500 ரூவா இலவசம், சொல்வது வருமான வரித்துறை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, October 5, 2018

சம்பளம் வாங்குறவங்களா நீங்க, முன் கூட்டி வரி கட்டுனா, ஒரு 500 ரூவா இலவசம், சொல்வது வருமான வரித்துறை



By Gowthaman MJ
வருமான வரி தெரியும், முன்கூட்டியே செலுத்த வேண்டிய அட்வான்ஸ் டேக்ஸ் (Advance Tax) தெரியுமா...? இந்த வரியை கட்டாததால் நீங்க வருமான வரி கட்டுறப்ப ஒரு 500 ரூவாயாவது வருமான வரித்துறைக்கு வட்டி கட்டுறீங்க அதாவது தெரியுமா...? தெரியாதுன்ன சொன்னீங்கன்னா வாங்க பாஸ் பாக்கலாம்.
 
வருமான வரி வரம்பு
60 வயதுக்கு உட்பட்ட, தனி நபர்களுக்கு வரி வரம்புகள். இந்த நிதி ஆண்டுக்கு 2018 - 19 க்கு வருமான வரி வரம்பு 2.5 லட்சம் வரை வரி கட்டத் தேவை இல்ல. 2,50,000 முதல் 5,00,000 வரைக்கும் ஐந்து சதவிகிதம் வரி. 5,00,000 முதல் 10,00,000 வரைக்கும் 20 சதவிகிதம் வரி செலுத்தவேண்டும். 10,00,000 ரூபாய்க்கு மேல் 30 சதவிகிதம் வரி செலுத்தவேண்டும்.

 
எவ்வளவு வரி
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 10,05,000 ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்று கொடுத்திருக்கிறோம். இந்தத் தொகை நான்கு சதவிகித செஸ் தொகையையும் உள்ளடக்கியது. இதற்கும் சேத்துத் தான் வருமான வரித்துறையினர வட்டி கணக்கிடுவார்கள். விவரங்களை மேலே அட்டவணை 1-ல் காணலாம்.


அட்டவனை 1, செலுத்த வேண்டிய மொத்த வரி, 4% செஸ் வரி உடன்


                    
சம்பளம்     செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி (4% செஸ் வரி உடன்)          சம்பளம்     செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி (4% செஸ் வரி உடன்)
400,000     7,800         750,000     65,000
450,000     10,400       755,000     66,040
500,000     13,000       760,000     67,080
505,000     14,040       765,000     68,120
510,000     15,080       770,000     69,160
515,000     16,120       775,000     70,200
520,000     17,160       780,000     71,240
525,000     18,200       785,000     72,280
530,000     19,240       790,000     73,320
535,000     20,280       795,000     74,360
540,000     21,320       800,000     75,400
545,000     22,360       805,000     76,440
550,000     23,400       810,000     77,480
555,000     24,440       815,000     78,520
560,000     25,480       820,000     79,560
565,000     26,520       825,000     80,600
570,000     27,560       830,000     81,640
575,000     28,600       835,000     82,680
580,000     29,640       840,000     83,720
585,000     30,680       845,000     84,760
590,000     31,720       850,000     85,800
595,000     32,760       855,000     86,840
600,000     33,800       860,000     87,880
605,000     34,840       865,000     88,920
610,000     35,880       870,000     89,960
615,000     36,920       875,000     91,000
620,000     37,960       880,000     92,040
625,000     39,000       885,000     93,080
630,000     40,040       890,000     94,120
635,000     41,080       895,000     95,160
640,000     42,120       900,000     96,200
645,000     43,160       905,000     97,240
650,000     44,200       910,000     98,280
655,000     45,240       915,000     99,320
660,000     46,280       920,000     100,360
665,000     47,320       925,000     101,400
670,000     48,360       930,000     102,440
675,000     49,400       935,000     103,480
680,000     50,440       940,000     104,520
685,000     51,480       945,000     105,560
690,000     52,520       950,000     106,600
695,000     53,560       955,000     107,640
700,000     54,600       960,000     108,680
705,000     55,640       965,000     109,720
710,000     56,680       970,000     110,760
715,000     57,720       975,000     111,800
720,000     58,760       980,000     112,840
725,000     59,800       985,000     113,880
730,000     60,840       990,000     114,920
735,000     61,880       995,000     115,960
740,000     62,920       1,000,000  117,000
745,000     63,960       1,050,000  132,600

 
அட்வான்ஸ் டேக்ஸ்
வருமான வரிச் சட்டம் 1956 சரத்து 208-ன் படி, இப்போது முன் கூட்டி யார் எல்லாம் வரி செலுத்த வேண்டும் என்று பார்ப்போம். ஒருவர் வருமான வரித்துறைக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் வரி செலுத்த வேண்டியவர்கள், கட்டாயமாக முன் கூட்டியே வரி செலுத்த வேண்டும்.

 
விலக்கு
வருமான வரிச் சட்டம் 1956 சரத்து 207-ன் படி
1. 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் முன் கூட்டியே வரி செலுத்த தேவை இல்லை.
2.Profit or Gain from Business or profession (PGBP) மூலம் தங்கள் வருமானத்தை ஈட்டுபவர்கள் முன் கூட்டியே வருமான வரி செலுத்தத் தேவை இல்லை. PGBP என்பது பிசினஸில் இருந்து பெறப்படும் லாபம் அல்லது ஒரு மருத்துவர், வக்கீல், பட்டயக் கணக்காளர்கள் போன்ற professional-கள் ஈட்டும் வருமானம் தான்.
 

எப்போது செலுத்த வேண்டும்
வருமான வரிச் சட்டம் சரத்து 211-ன் படி, நாம் செலுத்த வேண்டிய மொத்த வரியை நான்கு தவணைகளாக செலுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய மொத்த வரியில் 15% செலுத்தி இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய மொத்த வரியில் 45% செலுத்தி இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய மொத்த வரியில் 75% செலுத்தி இருக்க வேண்டும். கடைசி தவணையாக மார்ச் 15-ம் தேதிக்கும் செலுத்த வேண்டிய மொத்த வரியையும் (மீதமுள்ள 25 சதவிகிதத்தையும்) செலுத்தி இருக்க வேண்டும். இந்த விவரங்களை மேலே அட்டவணை 2-ல் காணலாம்.

 
அட்டவனை 2 கால அட்டவணை

          காலம்         செலுத்த வேண்டிய வரி
          ஜூன் 15    செலுத்த வேண்டிய வரியில் 15%
          செப்டம்பர் 15    செலுத்த வேண்டிய வரியில் 45%
          டிசம்பர் 15 செலுத்த வேண்டிய வரியில் 75%
          மார்ச் 15     செலுத்த வேண்டிய வரியில் 100%

234C
வருமான வரிச் சட்டம் 1956, சரத்து 234C-ன்படி கட்டத் தவறிய தொகைக்கு ஒரு சதவிகிதம் வட்டி செலுத்த வேண்டும். கட்ட வேண்டிய வரித் தொகைக்கு எவ்வளவு வட்டி இந்தச் சரத்தின் கீழ் செலுத்த வேண்டும் என்று மேலே அட்டவணை 3-ல் காணலாம்.
 
அட்டவனை 3, Income Tax act section 234 C

வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய வரி     சரியான காலத்தில் செலுத்தாததால் நம் நஷ்டம்  வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய வரி          சரியான காலத்தில் செலுத்தாததால் நம் நஷ்டம்
7,800         393.90       65,000       3282.50
10,400       525.20       66,040       3335.02
13,000       656.50       67,080       3387.54
14,040       709.02       68,120       3440.06
15,080       761.54       69,160       3492.58
16,120       814.06       70,200       3545.10
17,160       866.58       71,240       3597.62
18,200       919.10       72,280       3650.14
19,240       971.62       73,320       3702.66
20,280       1024.14     74,360       3755.18
21,320       1076.66     75,400       3807.70
22,360       1129.18     76,440       3860.22
23,400       1181.70     77,480       3912.74
24,440       1234.22     78,520       3965.26
25,480       1286.74     79,560       4017.78
26,520       1339.26     80,600       4070.30
27,560       1391.78     81,640       4122.82
28,600       1444.30     82,680       4175.34
29,640       1496.82     83,720       4227.86
30,680       1549.34     84,760       4280.38
31,720       1601.86     85,800       4332.90
32,760       1654.38     86,840       4385.42
33,800       1706.90     87,880       4437.94
34,840       1759.42     88,920       4490.46
35,880       1811.94     89,960       4542.98
36,920       1864.46     91,000       4595.50
37,960       1916.98     92,040       4648.02
39,000       1969.50     93,080       4700.54
40,040       2022.02     94,120       4753.06
41,080       2074.54     95,160       4805.58
42,120       2127.06     96,200       4858.10
43,160       2179.58     97,240       4910.62
44,200       2232.10     98,280       4963.14
45,240       2284.62     99,320       5015.66
46,280       2337.14     100,360     5068.18
47,320       2389.66     101,400     5120.70
48,360       2442.18     102,440     5173.22
49,400       2494.70     103,480     5225.74
50,440       2547.22     104,520     5278.26
51,480       2599.74     105,560     5330.78
52,520       2652.26     106,600     5383.30
53,560       2704.78     107,640     5435.82
54,600       2757.30     108,680     5488.34
55,640       2809.82     109,720     5540.86
56,680       2862.34     110,760     5593.38
57,720       2914.86     111,800     5645.90
58,760       2967.38     112,840     5698.42
59,800       3019.90     113,880     5750.94
60,840       3072.42     114,920     5803.46
61,880       3124.94     115,960     5855.98
62,920       3177.46     117,000     5908.50
63,960       3229.98     132,600     6696.30

234B
வருமான வரிச் சட்டம் சரத்து 234B-ன் படி மார்ச் மாதத்துக்குள் வருமான வரித்துறைக்குச் செலுத்த வேண்டிய தொகையினை மார்ச் மாதத்துக்குப் பிறகு செலுத்துகிறீர்கள் என்றால் ஒவ்வொரு மாதத்துக்கும் செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகையில் ஒரு சதவிகிதம் செலுத்த வேண்டும். உதாரணமாக நீங்கள் 25,000 ரூபாய் மொத்த வரி செலுத்த வேண்டும். மார்ச் மாதத்துக்குள் செலுத்தவில்லை. நீங்கள் அக்டோபர் மாதம் செலுத்துகிறீர்கள் என்றால் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களுக்கு 1% என்று, 25000*1% வட்டி*7 மாதங்கள் = 1750 ரூபாய் இந்தச் சரத்தின் கீழ் விதிக்கப்படும்.
 

கழிப்புகள் கணக்கிடலாமா?
நிச்சயமாக. மொத்தம் செலுத்த வேண்டிய வரித் தொகையை அனைத்து வருமான வரி கழிப்புக்குப் பின் தான் கணக்கிட வேண்டும். உதாரணமாக வாங்கும் சம்பளம் 6.5 லட்சம் ரூபாய், வாடகையாக 1,00,000 செலுத்துகிறீர்கள் என்றால் வெறும் 5.5 லட்சம் ரூபாய்க்கு 23,400 ரூபாய் தான் நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வருமான வரித் தொகை. இப்படி அனைத்து கழிப்புகளையும் கழித்துக் கொண்டு தான் கணக்கிட வேண்டும்.
 

குறிப்பு
அலுவலகத்தில் டிடிஎஸ் முறையில் சம்பளம் கொடுக்கும் போதே வருமான வரியைப் பிடித்துவிட்டால், அவர்கள் வரி செலுத்தியதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே தனியாக மீண்டும் வருமான வரித் துறைக்கு நீங்கள் வரி செலுத்தத் தேவை இல்லை.

No comments: