Header Ads

Header ADS

கேன்சர் வராமல் இருக்க இனி இந்த உணவுகளை உண்ணாதீர்!


நம் உடலில் கேன்சர் வர காரணமாக இருப்பது நாம் தினசரி உண்ணும் உணவுகள் தான். அத்தகைய கேன்சர் செல் உடலில் உருவகாமல் தடுக்க நாம் உண்ணும் சில உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
 
  மரபணு மாற்றப்பட்ட உணவு


இன்று நாம் உண்ணும் அனைத்து வகை காய்கறிகள் மற்றும் சோள உணவுகள் ஹைப்ரிட் மூலமாகவே தயாரிக்கப்படுகின்றன. மேலும் இதனை நாம் தினமும் உண்டு வருவதால் உடலில் கேன்சர் செல்கள் உருவாகின்றன.

எரிக்கப்பட்ட இறைச்சி

அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டு செய்யும் ஹெட்டோரோசைக்ளிக் அரோமாடிக் அமின்கள் உருவாகிறது.

இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் ஹெட்டோரோசைக்ளிக் அரோமாடிக் அமின்கள் சிதைக்கப்பட்டு வளர்சிதை மாற்றங்கள் உருவாகிறது.

வெள்ளை சர்க்கரை


  கரும்பில் இருந்து எடுக்கும் சர்க்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சர்க்கரையை மந்த விஷமாக
மாற்றுகிறது. எனவே வெள்ளை சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.

ஊறுகாய் வகைகள்

விற்பனைக்கு வரும் உப்பிட்டு செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் நைட்ரேட்ஸ் சேர்க்கப்பட்டிருக்கும்.


மேலும் இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த நைட்ரேட்ஸ் உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

சோடா

ஒரு சில பானங்களில் வெள்ளை சக்கரையை விட கொடூரமான சோளச்சக்கரை சேர்கிறார்கள். இது நம் உடலில் அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை உருவாக்கிறது.


சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை மாவு வகைகள்

கடையில் விற்கப்படும் மைதா, அட்டா, தோசா மிக்ஸ் போன்ற மாவு வகைகள் 80% கலப்படம் செய்யபட்டவைதான். மேலும் இதனை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கேன்சர் செல் வர வாய்ப்பு உள்ளது.

பண்ணை மீன்கள்


 பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்கபடுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ஆண்டிபயாடிக் ஊசி போடப்படும்,
 
மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன் தான் சிறந்தது.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்


  விதைகள், காய் கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது.


உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நம் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். எனவே செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.