Header Ads

Header ADS

ஜாக்டோ ஜியோ விரிவடைந்த மாநில உயர்மட்டக்குழு கூட்ட முடிவுகள்


தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் சேலத்தில் உள்ள ஆர்.டி.பார்த்தசாரதி
ஹாலில் 16.9.2018 அன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலத் தலைவருமான திரு..மோசஸ், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத்தலைவர் திரு.மாயவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.அன்பரசன் ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர்.
 
கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தை 18.9.2018 அன்று அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் நடத்துவது

ஆசிரியர் சந்திப்பு இயக்கத்தை உடனடியாக தொடங்கி அனைவரிடமும்  மாநில அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தை பெற்று உரிய அலுவலரிடம் ஒப்படைப்பது

4.10.2018 அன்று நடைபெற உள்ள தற்செயல் விடுப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது
 
மாநிலம் முழுவதும் 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் உறுப்பு சங்கங்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு கோயம்பத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டலம் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

13.10.2018 அன்று சேலத்தில் மாநில வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டை நடத்துவது எனவும் இதில் தொழிற்சங்க தலைவர்களான திரு.சண்முகம், திரு.சௌந்திரராஜன் ஆகியோரை பங்கேற்க வைப்பது

மாநில மாநாட்டிற்கான செலவினங்களை மாவட்ட ஜாக்டோ ஜியோவிடமிருந்து பெறுவது உள்ளிட்ட முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகவல் பகிர்வு:
.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.