மிகச் சிறிய மொபைல் பிரிண்டர்
மொபைல் போன் அளவிலான பிரிண்டரை போலராய்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஸ்மார்ட்போனில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை இதில் உடனுக்குடன் போட்டோக்களாக பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும். இது 2.5 செ.மீ.
தடிமன் கொண்டது. இதன் எடை 186 கிராம் மட்டுமே. இதில் வழக்கமாக பிரிண்டரில் பயன்படுத்தப்படும் வண்ண மைகளுக்கு பதிலாக விசேஷமான காகிதம் (ஜிங்க் பேப்பர்) பயன்படுத்தப்படுகிறது. இந்த காகிதத்தில் சியான், மஞ்சள், மெஜந்தா ஆகிய வண்ணங்கள் கிரிஸ்டல் வடிவில் இடம்பெற்றிருக்கும். நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் உள்ள வண்ணங்களுக்கு ஏற்ப அவை காகிதத்தில் பரவி புகைப்படம் கிடைக்கும்.
எந்த
இடத்திலும் உடனடியாக பிரிண்ட் எடுக்கும் வசதிக்காக கைக்கு அடக்கமான அளவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் முறையில் செயல்படும். இதனால் ஸ்மார்ட்போனுடன் இதை இணைத்து செயல்படுத்தலாம்.
புளூ
டூத் மூலமாக டேப்லெட் போன்றவற்றில் எடுக்கும் புகைப்படங்களையும் இதில் பிரிண்ட் எடுக்க முடியும். இதற்கென பிரத்யேகமான செயலி (ஆப்) ஒன்றையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படக் கூடியது. இதனால் புகைப்படங்களை எடிட் செய்து தேவையான பகுதிகளை மட்டும் பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும்.
புகைப்படம் எடுப்பவர்களுக்கு அதை உடனடியாக பிரிண்ட் எடுத்து பார்க்க இது மிகவும் வசதியாக இருக்கும். அமேசான் இணையதளத்திலும் இதை வாங்க முடியும்.
ரூ.
23 ஆயிரம் விலையிலிருந்த இந்த பிரிண்டர் இப்போது 33 சதவீத தள்ளுபடியில் ரூ. 15,500-க்கு கிடைக்கிறது
No comments
Post a Comment