Header Ads

Header ADS

புதிய அறிமுகம்:-அதி நவீன ஹெல்மெட்!*




சைக்கிள் ஓட்டுபவருக்கும் இப்போது ஹெல்மெட் அவசியமாகிறது.

குறிப்பாக சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல, இரவில் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கும் உதவும் வகையில் அதிநவீன ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டின் பின்பகுதியில் விளக்குகள் ஒளிரும்.
 

இதில் மோஷன் சென்சார் எனப்படும் அதிர்வுகளுக்கு ஏற்ப செயல்படும் உணர் கருவி உள்ளது. இதனால் நீங்கள் சைக்கிளை திருப்பும் போது, பைக் இண்டிகேட்டர் போல விளக்குகள் ஒளிரும். அதேபோல பிரேக் பிடிக்கும்போதும், சைக்கிளை மெதுவாக ஓட்டும்போதும் விளக்குகள் ஒளிரும்.
 
இந்த ஹெல்மெட்டில் புளூடூத் வசதி இருப்பதால் ஸ்மார்ட்போனை இணைக்கமுடியும். அதனால் சைக்கிள் பயணத்தின்போதும் இசையைக்கேட்டபடி பயணிக்கலாம். அழைப்புகள் வந்தால் பதில் கூறலாம்.
 
இதில் போன் கன்டக்ஷன் (Phone Conduction) தொழில்நுட்பம் உள்ளது. அதனால் பாடல் கேட்பதுடன், சாலையின் நிலவரத்தையும் உணரமுடியும். அதாவது நமக்கு பின்னால் வரும் வாகனங்களின் ஒலியையும் தெளிவாக கேட்க முடியும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.