ஐ.நா.சபை துணை பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!!!
சத்யா திரிபாதி இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் சத்யா திரிபாதி ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஐ.நா. சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்ததாவது: இந்தியாவை சேர்ந்த சத்யா திரிபாதியை துணை பொதுச்செயலாளராக நியமித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட மையத்தின் தலைவராகவும் சத்யா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1998-ஆம்
ஆண்டு முதல் ஐ.நா. சபையில் பல்வெறு முக்கிய பொறுப்புகளை சத்யா திரிபாதி வகித்துள்ளார். மாசுக் கட்டுப்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளுக்கான ஐ.நா.வின் இயக்குநர் மற்றும் நிர்வாகத் தலைவர், சைப்ரஸ் ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தையின் சட்டம் மற்றும் ஒப்பந்தக் குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் சத்யா திரிபாதி திறம்பட செயல்பட்டார்.
2030-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் வளர்ச்சி திட்டத்தின் மூத்த ஆலோசகராக கடந்த ஆண்டு முதல் சத்யா திரிபாதி இருந்து வருகிறார் என்று ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார். சத்யா திரிபாதி கடந்த 35 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், பொருளாதார நிபுணராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment