Header Ads

Header ADS

தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்துச் செய்யாமல், பிளஸ் தேர்வு மட்டும் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை- கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

💢 தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்துச் செய்யாமல், பிளஸ் தேர்வு மட்டும் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை. உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை விடுத்துள்ளார் .

12th class board exam: ‛பிளஸ் 2 தேர்வு கட்டாயம் வேண்டும்’ -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு


மாதிரிப்படம் - தேர்வு எழுதும் மாணவர்கள்

 

💢கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்கு வந்த பின், எழுத்துப் பூர்வமான +2 பொதுத் தேர்வை ஒரு மாத முன் அறிவிப்போடு நடத்த வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

💢கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு சிபிஎஸ்இ 12ஆம் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், மாநில கல்வித்திட்ட 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து

முதல்வர் மு..ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்ச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

 

 

💢இந்நிலையில், எழுத்துப் பூர்வமான +2 பொதுத் தேர்வை ஒரு மாத முன் அறிவிப்போடு நடத்த வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 


💢அதில், தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை. உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

 

💢எனவே, தமிழ் நாடு அரசு, மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படாமல், நோய்த் தொற்று கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு எழுத்துப் பூர்வமான +2 பொதுத் தேர்வை ஒரு மாத முன் அறிவிப்போடு நடத்த வேண்டும்.

 

 

💢மாணவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே தேர்வு எழுத வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆசிரியர்களும் இருக்கும் பகுதியிலேயே தேர்வு பணிகளை மேற்கொள்ளலாம். தமிழ் நாடு அரசு உருவாக்கியுள்ள வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பை சரியாக பயன்படுத்தி பாதுகாப்பாக தேர்வை நடத்த இயலும்.

 

 

12th class board exam: ‛பிளஸ் 2 தேர்வு கட்டாயம் வேண்டும்’ - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

 

💢மாணவர்கள் குழப்பம் அடையாமல் தங்களின் பயிற்சிகளை தொடரும் வகையில், தேதியை பின்னர் அறிவித்தாலும், தேர்வு நடக்கும் என்ற உறுதியான அறிவிப்பை தமிழ் நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ் நாடு அரசைக் கோருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

💢பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின் அமைச்சர், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார். சிபிஎஸ்இ தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு குறித்து அறிவிக்க வேண்டியுள்ளது. இதனால் இன்றைய ஆலோசனைக்கு பின் அது தொடர்பான அறிவிப்ப வெளியாகலாம். பெரும்பாலும், அது மத்திய அரசின் முடிவை ஒட்டிய முடிவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.