பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு எப்போது? கல்வித்துறை விரைவில் வெளியிடுகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இதன் பேரில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பதாக தெரிகிறது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், தொடக்க பள்ளிகள் முதல் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிப்பது தொடர்கிறது. இந்நிலையில், பள்ளிகளில் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்றும், குடிநீர், கழிப்பிட வசதிகளை சரியாக செய்யவேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் பேரில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. இந்த ஏற்பாடுகளை பார்க்கும் போதுவிரைவில் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பு வரலாம் என்று கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment