டிட்டோஜாக்பள்ளிக்கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை முடிவு.....
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு 6.6.2023 செவ்வாய்க்கிழமை சென்னையில் கூடி பதவி உயர்விற்கு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு கூறியதை தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து ரத்து செய்யவேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை முன்வைத்து மூன்று கட்ட போராட்டத்தை டிட்டோஜாக் அறிவித்தது.
அறிவித்த 24 மணி நேரத்திற்குள் தமிழக முதல்வர் கவனத்திற்கு சென்று பள்ளிக்கல்வி அமைச்சர் உத்தரவின் பேரில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்களை அழைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் திரு அறிவொளி அவர்களும் தொடக்கக்கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்களும் இன்று சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் டிட்டோஜாக் சார்பில் 11 சங்கங்கள் கலந்துகொண்டு 27 அம்ச கோரிக்கைகளை இயக்குனர்களிடம் வழங்கப்பட்டது.
அதன் பிரதான கோரிக்கையாக பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி அவசியம் என்கின்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு 2.6.2023 அன்று வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டும் என்கின்ற கோரிக்கை உட்பட ஆசிரியர்களின் பிரதான கோரிக்கைகள் வழங்கப்பட்டது.
பதவி உயர்விற்கு TET தேர்ச்சி தேவையில்லை என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது.இதை நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெளிவுபடுத்துவோம் என கூறினார்கள்.மற்ற கோரிக்கைகளை உரிய குழுவை அமைத்து படிப்படியாக விரைவில் அமல்படுத்துவோம் என இயக்குநர்கள் கூறினர்.
இயக்குநர் பேச்சுவார்த்தைக்குப்பின் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் கூடி பேசிய பின் இயக்குநரின் உத்தரவாதத்தை ஏற்று டிட்டோஜாக் அறிவித்த மூன்று கட்ட போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றது என அறிவித்தனர்.
No comments
Post a Comment