பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் 1-9 வகுப்புகளுக்குதேர்வுகள் எப்போது ? இன்று / நாளை தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, March 18, 2024

பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் 1-9 வகுப்புகளுக்குதேர்வுகள் எப்போது ? இன்று / நாளை தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு...




🌻தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி துவங்கியது. வரும், 22ம் தேதி தேர்வு முடிகிறது. பிளஸ் 1 பொதுதேர்வு மார்ச், 4ல் துவங்கியது. வரும், 25ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்க உள்ளது; ஏப்., 8ல் முடிகிறது.
🌻லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 19ல் ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.              


🌻இந்த ஓட்டுப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும், 15ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.           

🌻இதன் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
 
🌻இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் 
இன்று ஆலோசித்து, வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். 


🌻அதன் விபரம், இன்று அல்லது நாளை பள்ளிக்கல்வியால் வெளியிடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments: