Header Ads

Header ADS

அகப்பயிற்சி நிறைவு செய்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 1000/-ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான வழிமுறைகள்

அகப்பயிற்சி நிறைவு செய்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 1000/-ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான வழிமுறைகள்



பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறையின்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 நாட்கள் அகப்பயிற்சியினை (internship) மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது. அதற்கான நிதி பார்வை 2  யிலுள்ள இவ்வலுவலக கடிதத்தின் படி அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டது.

பார்வை 1 யிலுள்ள செயல்முறையில் தெரிவிக்கப்பட்டதின் படி அகப்பயிற்சியினை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி அகப்பயிற்சி நிறைவு செய்த ஒவ்வொரு மாணவருக்கும் ரூ1000/- ஊக்கத்தொகையாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அகப்பயிற்சி நிறைவு செய்த 12 ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சி சென்ற தொழிற்சாலைகள்/நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்களை

tnemis.tnschools.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்விவரங்களை ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் tnemis.tnschools.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

SPD PROCEEDINGS  -  DOWNLOAD HERE 

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.