THB- social science- Class-4 & 5 -Term -3 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 24, 2023

THB- social science- Class-4 & 5 -Term -3


THB- social science - Class-4 & 5

முகவுரை 

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

கல்வி செல்வத்தை எதிர்கால தலைமுறைக்கு சிறப்பாக சேர்க்க வழிவகுக்க சிறப்பான திட்டமாக என்னும் எழுத்து திட்டம் அமைந்துள்ளது கற்றல் இடைவெளியை குறைத்து இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது இரண்டாம் பருவத்தை மிகவும் சிறப்பாக கொண்டு சென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் குழுவில் பதிவிடும் காணொளிகள் புகைப்படங்கள் மற்றும் அனுபவ பகிர்வுகள் மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்தும் தங்களின் ஆர்வத்தினை முயற்சியையும் தெரிந்து கொள்ள முடிகிறது

மூன்றாம் பருவ சமூக அறிவியல் பாடப் பகுதிகள் 

நான்காம் வகுப்பு:

1)உலகெல்லாம் தமிழர்கள் 

2)குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் 

3)மதராஸ் மாகாணத்தின் வரலாறு

ஐந்தாம் வகுப்பு 

பாடப்பகுதிகள்

1)கோட்டைகளும் அரண்மனைகளும் 

2)வேளாண்மை

3)கல்வி உரிமைகள்


மூன்றாம் பருவத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்த...
தனி வகுப்பு எனில் 

தனிவகுப்பு எனில் அந்தந்த வகுப்புகளுக்குரிய செயல்பாடுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்..


பல்வகுப்பு எனில்

பல்வகுப்பு எனில் முதலில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.பின்னர் அவர்களுக்கு பயிற்சி நூல் செயல்பாடுகளை செய்ய சொல்ல வேண்டும். அடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்


பயிற்சி நூல்

மாணவர்களை குழுவாகவும் இணையாகவும் தனியாகவும் பயிற்சி நூல் செயல்பாடுகளை செய்ய வைக்கலாம் .ஆனால் நானே செய்வேன் ,மாதத் தேர்வு, தொகுத்தறிவு தேர்வு ,மதிப்பீடு ஆகியவற்றை மட்டும் மாணவர்கள் தாங்களாகவே செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.


நானே உருவாக்குவேன்:

மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் பயிற்சி நூல் பகுதி இந்த பகுதியில் மாணவர்களுக்கு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளின் அடிப்படையில் மாணவர்கள் தாங்களாகவே உரியவற்றை உருவாக்குவதற்கான இடம் அளிக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்பு படிவம் 

பாடக்குறிப்பு படிவம் எழுதுவதற்கு முன்பு அந்த வாரத்திற்கான கட்டக விளக்க காணொளியை பார்த்து திட்டமிட்டால் வகுப்பறை மேலாண்மை இன்னும் சிறப்பாக அமையும்.


முன் தயாரிப்பு சில
செயல்பாடுகள் செய்வதற்கு மாணவர்கள் செய்து வர வேண்டிய செயல் திட்டம் திரட்டி வரவேண்டிய தகவல்களை போன்றவை முன் தயாரிப்பு என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன குறிப்பிட்ட கட்டத்திற்கு அல்லது செயல்பாடுகள் தேவைப்படும் முன் தயாரிப்பு அனைத்து தயாரிப்புக்கு தேவைப்படும் கால அவகாசத்திற்கு ஏற்ப முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளது அதனை மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவித்துச் செய்ய வைக்க வேண்டும். 

சமூக அறிவியல் பாடத்திற்கான ஆசிரியர் கையேட்டினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
👇👇👇👇👇👇👇


No comments: