THB- Science- Class- 4&5 -term-3 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 24, 2023

THB- Science- Class- 4&5 -term-3

THB- Science- Class- 4&5



முகவுரை:

அன்பார்ந்த ஆசிரியர்களே முதல் இரண்டு பருவங்களை சிறப்பாக கொண்டு சென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் குழுவில் பதிவிடும் காணொளிகள் புகைப்படங்கள் மற்றும் அனுபவங்கள் வாயிலாக இத்திட்டத்தினை நல்ல முறையில் செயல்படுத்தும் தங்களின் ஆர்வத்தையும் முயற்சியும் தெரிந்து கொள்ள முடிகிறது இன்னும் புரிதலோடு வகுப்பறையில் கொண்டு செல்ல உங்களுக்கான சில கருத்துக்கள்

அறிவியல் பாட அணுகுமுறை:
ஏன் எதற்கு எப்படி போன்ற கேள்விகளை உருவாக்கும் களமாகவும் எதையும் உற்றுநோக்கி வகைப்படுத்தி பகுத்தாய்ந்து முடிவுகளை காணும் திறன்களை மாணவர்களுக்கு பெரும் வகையிலும் வகுப்பறை செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன


செயல்பாடுகளின் அமைப்பு

மாணவர்களின் அறிவியல் பாடக் கருத்துக்களை முழுமையாக அடைப்பு பெறும் வகையிலும் எதையும் அறிவியல் மனப்பான்மையோடு உற்றுநோக்கம் திறனை பெரும் வகையிலும் செய்து பார்த்து கற்றல் விளையாட்டுகள் கலந்துரையாடல் செயல் திட்டங்கள் மற்றும் பாடல்கள் போன்ற எளிய செயல்பாடுகள் அழிக்கப்பட்டுள்ளன

பாடப்பகுதிகள் 

1)சுற்றுச்சூழல் 

2)விலங்குகள் 

3)காற்று 
மேற்கூறிய பாடப்பகுதிகள் செயல்பாட்டு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அறிவியல் களஞ்சியம்

ஆராய்ச்சி மனப்பான்மையையும் புதியன படக்கும் திறனையும் படைப்பாற்றலையும் வளர்க்க உதவும் களம் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் செயல்திட்டங்களை காட்சிப்படுத்தும் களம்


முன் தயாரிப்பு

சில செயல்பாடுகளை செய்வதற்கு மாணவர்களை செய்து வரவேண்டிய செயல்திட்டம் மற்றும் திரட்டி வரவேண்டிய தகவல்கள் இத்தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு தேவையான முன் தயாரிப்பு போதிய கால அவகாசத்திற்கு ஏற்ப முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது..

பொருளடக்கம் 

வகுப்பு- 4 

1)பசுமை சுற்றுச்சூழல்

2)விலங்குகளின் வாழ்க்கை

வகுப்பு-5

1) நமது சுற்றுச்சூழல்

2)விலங்குகள்

வகுப்புகள் 4 மற்றும் 5

3) காற்று

ஆசிரியர் கையேட்டை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
👇👇👇👇👇👇

No comments: