தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் (டிட்டோ-ஜாக்) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, July 20, 2023

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் (டிட்டோ-ஜாக்) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் (டிட்டோ-ஜாக்) இன்று சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இன்றைய கூட்டம்


*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்*
*பொதுச்செயலாளர்*
*திரு வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்*
*பொதுச்செயலாளர்*
*திரு மயில் வரவேற்புரையாற்றினார்,*
*தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின்*
*பொதுச்செயலாளர்*
*திரு சி.சேகர் முன்னிலை வகித்தார்.*
     

🌷இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.*

*🌷(1)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*திரு வி.எஸ்.முத்துராமசாமி,பொதுச்செயலாளர்.*

*🌷(2) தமிழக ஆசிரியர் கூட்டணி-*
*திரு வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*

*🌷(3)தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-*
*திரு ச. மயில், பொதுச்செயலாளர்.*

*🌷(4)தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*திரு.இரா.தாஸ், பொதுச்செயலாளர்.*

*🌷(5)தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்- திரு சி.சேகர். பொதுச்செயலாளர்*

*🌷(6)தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் இலா.தியோடர் ராபின்சன். பொதுச் செயலாளர்*

*7.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் திரு.சண்முகநாதன். பொதுச்செயலாளர்*

*8.தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி- திரு சாந்தகுமார், மாநில துணைப் பொதுச் செயலாளர்*

*🌷(9)தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- திரு கோ.காமராஜ், பொதுச்செயலாளர்.*

*🌷(10)JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- திரு.ஜெகநாதன், பொதுச்செயலாளர்.*

*🌷(11)தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்- திரு.ஜான்வெஸ்லி, பொதுச்செயலாளர்.*

    *🌷இன்றைய கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.*

*🌷(1)பதவி உயர்வுக்கு TET தேர்வு தேவையில்லை என டிட்டோ-ஜாக் சார்பில் அனைத்துச்சங்க உறுப்பினர்கள் 184 பேரின் சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது.*

இது தொடர்பாக
அடுத்த வாரம் 26.7.2023,27.7.2023 புதன்,வியாழன் இரண்டு நாட்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் அனைத்து கல்வி அதிகாரிகளையும் சந்தித்தபின் மீண்டும் 27.7.2023 அன்று டிட்டோ-ஜாக் உயர்மட்டக்குழுக்கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
 இன்றைய கூட்டத்தில் கீழ்க்கண்ட பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது.


(1)பதவி உயர்விற்கு TET தேர்வு தேவையில்லை என அரசை கொள்கை முடிவை எடுக்கவைப்பது. வழக்கை தீவிரப்படுத்துவது.

2.இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.

(3)CPS இரத்து, ஊக்க ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கையை விரைவில் வென்றெடுப்பது.

4.எண்ணும் எழுத்தும் மற்றும் EMIS நெருக்கடியில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை விடுவித்து மகிழ்வான கல்வியை வழங்க வேண்டும்.

*🍁By டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு

No comments: