Header Ads

Header ADS

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பமா?

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பமா?
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கணினி வழியில் டிசம்பர் முதல் ஜனவரி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுதும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் நடத்தப்படும்.

தேர்வில் பங்கேற்க விரும்புவோர் https://ctet.nic.in என்ற இணையதளத்தில் அக்., 31 முதல் நவ. 24 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
தேர்வு கட்டணத்தை நவ. 25க்குள் செலுத்த வேண்டும்.

பட்டியல் பழங்குடியினத்தவர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ஒரு தாளுக்கு 500 ரூபாயும்; இரண்டு தாளும் சேர்த்து எழுத விரும்பினால் 600 ரூபாய்; மற்ற பிரிவினர் ஒரு தாளுக்கு 1 000 மற்றும் இரண்டு தாள்களுக்கு சேர்த்து 1 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வுக்கான சரியான தேதி விபரம் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்படும். தேர்வு மையம் அமைய உள்ள நகரை முன்னுரிமை அடிப்படையில் தேர்வர்கள் குறிப்பிடலாம். விண்ணப்ப பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு மையம் இருக்கும் நகரங்கள் ஒதுக்கப்படும்.

ஒவ்வொரு நகர தேர்வு மையங்களுக்கான தேர்வர்களின் எண்ணிக்கை முடிந்து விட்டால் மீதமுள்ள தேர்வர்கள் வேறு நகரத்தை தேர்வு செய்யவோ தேர்வு விண்ணப்பத்தை ரத்து செய்யவோ ஆன்லைனில் வாய்ப்பு அளிக்கப்படும். கூடுதல் விபரங்களை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.