பட்டியலின மாணவ SC /STமாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் தாய்/ தந்தையின் ஊதியத்தில் DA மற்றும் HRA கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை
பட்டியலின மாணவ SC /STமாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் தாய்/ தந்தையின் ஊதியத்தில் DA மற்றும் HRA கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை....
நடுவணரசு திட்டத்தின் கீழ் பார்வை ஆறில் குறிப்பிட்டுள்ள அரசானைப்படி 2012-13 ஆம் ஆண்டு முதல் வருமான வரம்பு 2.50 லட்சம்
என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதேபோல் மாநில அரசு போஸ்ட் மெட்ரிக் திட்டத்தின் கீழ் பார்வை மூன்றில் குறிப்பிட்டுள்ள அரசாணைப்படி 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் வருமானவரம்பு 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடுவணரசு மெட்ரிக் உதவி தொகை திட்டத்தின் வரைமுறைகளின் படி அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி
உதவித்தொகை விண்ணப்பிக்கும் போது அரசு ஊழியரின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு வகை மூலங்களின் மூலம் அவர்கள் குடும்ப ஆண்டு வருமான கணக்கிடும் பொழுது அத்தகைய கணக்கீட்டின் மூலம் அவர் பெரும் வீட்டு வாடகை எப்படி கணக்கில் கொள்வது வருமானம் கணக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போன்று மாநில அரசு ஊழியர்களின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்ட வரைமுறைகளின் படி தமிழக அரசு ஊழியரின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு வகையை மூலங்களின் மூலம் அவர்தம் குடும்ப ஆண்டு வருமானம் கணக்கிடும் பொழுது அவர் பெரும் அகவிலைப்படியை நீக்கி வருமானம் கணக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வருமானவரம்பு காரணமாக மைய அரசு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இயலாத ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு மாறிய ஆதிதிராவிடர் இனத்தினை சார்ந்த தமிழக அரசு ஊழியரின் பிள்ளை வேறு வருமான மூலங்கள் ஏதும் இல்லாத நிலையில் அரசு ஊழியர் பெரும் அகவிலைப்படி நீக்கி வருமானம் கணக்கிடும் பொழுது மாநில அரசு திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும்.
நெறிமுறைகள்- pdf
👇👇👇👇👇
No comments
Post a Comment