Header Ads

Header ADS

ஆசிரியர்களின் மனசு' திட்டம் தொடக்கம்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்..

ஆசிரியர்களின் மனசு' திட்டம் தொடக்கம்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.... Mail id - உருவாக்கம்.....


ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க ‘ஆசிரியர்களின் மனசு’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர் சங்கம் சார்பில் 'ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார். இதில்,


அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.


இதனைதொடர்ந்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு செல்கிற இயக்கம் இல்லை. 'ஆசிரியர்களின் மனசு' என்ற பெட்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.



இதில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பணி பாதுகாப்பு சட்டம், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 



என்ற இ.மெயில் முகவரியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.