இடைநிலை ஆசிரியர்களின் சிறப்பு படிகள், தனி ஊதியம் தற்போதும் தொடரும்....
மதுரை சம்பளக் கணக்கு அலுவலர் அவர்கள், இடைநிலை ஆசிரியர்களின் சிறப்பு படிகள், தனி ஊதியம் தற்போதும் தொடர்வது குறித்து புதிய ஊதியக்குழு அரசாணை எண் 303 நிதி நாள் 13.10.2017ல் ஏதும் குறிப்பிடாத நிலையில், அக்டோபர்-2017 முதல் ஊதியப்பட்டியலில் அப் படிகளை ஆசிரியர்கள் பெற்று வருவதால், அதற்க்குரிய அரசாணைகள் மற்றும் தெளிவுரைகள் இருந்தால் அனுப்பக்கோரி, பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலருக்கு தெளிவுரை கோரியுள்தை அடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கும் அதனை தெரிவித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரால் அனுப்பப்பட்டுள்ள கடிதம்
ஆசிரியர்களின் *தனி ஊதியம்* மற்றும் *சிறப்பு படிகள்* பற்றி, புதிய ஊதியக்குழு அரசாணை எண் 303 நிதி நாள் 13.10.2017ல் ஏதும் குறிப்பிடப்பட்வில்லை, எனவே சிறப்புப்படி 500ஐ 2017 அக்டோபர் முதல் சம்பளப்பட்டியலில் கோரக்கூடாது என மதுரைக் கருவூல கணக்குத்துறை அலுவலர் அவர்கள் அரசாணைக்கு முரணாக மதுரை மாவட்டக்கல்வி அலுவலருக்கு விதிமீறல் ஆணை வழங்கியுள்ளார்கள்.
மதுரை கருவூல அலுவலரின் மேற்கண்ட விதிமீறல் ஆணை தவறு. ஏனெனில் புதிய ஊதியக்குழு -2017 அரசாணை 303 நாள் 13.10.2017ன் பக்கம் 4ல் இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் ரூ.750ஐ, ரூ.2000ம் ஆக மாற்றியமைத்து ஆணையிடப்பட்டிருக்கும் பட்சத்தில் , தனி ஊதியம் பற்றி அரசாணை 303ல் ஒன்றும் சொல்லலப்படவில்லை என அரசாணைக்கு முரணாக கூறியுள்ளார்கள். மேலும் மேற்கூறிய புதியஊதியக்குழு அரசாணை 303ல் இடைநிலை ஆசிரியர்களின் தனிஊதியம் மட்டுமே மாற்றியமக்கப்பட்டுள்ளது. சிறப்புப்படி ரூ.500ஐ மாற்றியமைத்தோ அல்லது *ரத்து செய்தோ* அவ்வரசாணையில் ஆணையிடப்படவில்லை.
நிதித்துறையால் அரசாணை எண் 270 நிதித்துறை நாள் 26.08.2010ன் மூலம் 01.08.2010 முதல் வழங்கப்பட்டுள்ள சிறப்புப்படி ரூ.500ஐ, தற்போது நிதித்துறை ரத்து செயயவுமில்லை! மதுரை கருவூல அலுவலரும் இது குறித்து அரசின் நிதித்துறையிடம் எழுத்துப்பூர்வமாக தெளிவுரை கோரி, அதனடிப்படையில் அரசால் ரத்து செய்யப்பட்ட தெளிவுரை ஆணை ஏதும் பெறவுமில்லை. தெளிவுரை ஆணை ஏதும் பெறாத நிலையில் ஆசிரியராகளுக்கு 12 ஆண்டுகளாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறபபுப்படி ரூ500ஐ மதுரைக் கருவூல அலுவலர் முன்தேதியிட்டு ரத்து செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விதிமீறல் செயலாகும்.. மேலும் அன்னாரது பணி பணம் பெற்று வழங்கும் அலுவலர் ஆசிரியர்களுக்கு சமர்ப்பித்தீருக்கும் ஊதியம் சம்பந்தமான கருவூலப்பட்டடியல் சரி என்றால் Pass பன்ன வேண்டும். தவறு என்றால் தடை செய்ய வேண்டும். ஒருவேளை கருவூலப்பட்டியலில் ஊதிய நிர்ணயம் குறித்த சந்தேகம் ஏற்பட்டால மாநிலக்கருவூலக அதிகாரி(இந்திய ஆட்சிப்பணி) அவர்களிடம் விளக்கம் கோர வேண்டும். அதற்குப்பதிலாக ஆசிரியர்கள் அரசின் நிதித்துறையின் அரசாணை எண் 270 மூலம் 12 ஆண்டுகளாக பெற்றுக்கொண்டிருக்கும் சிறப்புப்படியின் பணப்பலனை, தற்போது 5ஆண்டுகளுக்க்கு முன்பிலிருந்தே முன்தேதியிட்டு ரத்து செய்திருப்பது, விதிக்கு முரணாண அதிகாரத் துஷ்பிரயோக செயலாகும்.
மேலும் விதி 4 (3) ஊதியநிர்ணயம் என்பது 3வது ஊதியக்குழு அமுலுக்கு வந்த நாளான 1978ல் இருந்து 6வது ஊதியக்குழுவின் ஊதிய விகிதம் நடைமுறையில் இருந்த 31.12.2005 வரை 27 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. அந்த 4(3) ஊதிய நிர்ணயத்தை பயன்படுத்தி பல லட்சம் ஆசிரியர் மற்றும் அரசூழியர்கள் ஊதியநிர்ணயம் செய்து பலன் பெற்று வந்தனர். தற்போது புதிய ஊதியக்குழு ஊதிய நிர்ணய அரசாணை எண் 303 நிதித்துறை நாள் 13.10.2017ல் 4(3) ஊதிய நிர்ணயம் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. தற்போதுள்ள புதிய ஊதியக்குழு அரசாணையில் 4(3) குறித்து
*குறிப்பிடவில்லை * என்பதற்காக, 3,4,5,6வது ஊதியகாகுழுவில் 4(3) ஊதியநர்ணயம் மூலம் பயன்பெற்ற ஆசிரியர்களின் பணப்பலன்களை தற்போது முன்தேதியிட்டு ரத்து செய்ய முடியுமா? முடியாது.
அதேபோல்தான் புதிய ஊதியக்குழு-2009ன் ஒருநபர்குழு அரசாணை எண் 270 மூலம் 2008ல் பெற்ற சிறப்புப்படி ரூ.500ஐ, தற்போதுள்ள புதிய ஊதியக்குழு-2017ன் அரசாணை எண் 303ல் குறிப்பிடவில்லை என்பதற்காக தற்போது முன்தேதியிட்டு ரத்து செய்ய முடியாது.
சா.ஜாண்சன்,
மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்,
தூத்துக்குடி மாவட்டம்.
No comments
Post a Comment