Header Ads

Header ADS

G.O 395-ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலமாக ஜமாபந்தி மனுக்களை பெற உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!! ஆன்லைனில் ஜமாபந்தி மனுக்கள் விண்ணப்பிப்பது எப்படி ???

CLICK HERE TO DOWNLOAD- G.O-395 DATE-7.6.2021

ஆன்லைனில் ஜமாபந்தி மனுக்கள் விண்ணப்பிப்பது எப்படி ???

 

முழு விவரம்

 

ஜமாபந்தி என்றால் என்ன ?

 

ஜமாபந்தி ஆண்டு தோறும்  ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமம் தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும்

 

 

இந்த வருவாய் தீர்வாயத்தில்   சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

 

 

வருவாய் தீர்வாயத்தின்  போது கூடுதலாக கிராம மக்கள் தங்கள் மற்றும் தங்கள் குறைகளை தீர்க்க மனு தரலாம்.



#ஜமாபந்தியில் எதற்க்காக மனு அளிக்கலாம்  ?

 

 பட்டா, சிட்டா, அடங்கல் குறித் தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம்.

 


குடிநீர் வசதி, சாலைவசதி, மயான வசதி, கழிவுநீர் சாக்கடை வசதி ,முதலிய தேவைகள் குறித்தும் வருவாய் துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.

 


இலவச மனைப்பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்

 

 

வீட்டுமனை உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்

 

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

 

ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், என்று உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.

 

இந்த வருவாய் தீர்வாயத்தில் பொது மக்களின் நியாயமான கோரிக்கைகள் மனுக்கள் உடனடியாக வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்படும்.

 


இந்த ஆண்டு ஜமாபந்தி ஆன்லைன் மூலம் ஏன் ?

 

கொரோனாவால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அவர்களிடம் நேரிடையாக மனுக்களை பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது

 

 

 எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை சேவை மையம் மூலமாகவோ அல்லது நீங்கள் ஆன்லைன் மூலம் மனு அளிக்கலாம்.

 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி ?




முதலில் மேல் உள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்

 

 

அடுத்து அதில் online petition Indian citizen என்ற மூன்றாவது பட்டனை அழுத்துங்கள்

 


 

அடுத்து உங்கள் மொபைல் எண் பதிவு செய்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP பதிவு செய்து உள்ளே நுழையவும்

 


அடுத்ததாக உங்கள் கோரிக்கை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுத் துறை, உங்கள் மாவட்டம், உங்கள் தாலுகா, உங்கள் வருவாய் கிராமம் ,ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

 

 


அடுத்து உங்கள் கோரிக்கையை சரி பார்த்துவிட்டு அனைத்தும் சரியாக இருந்தால் Submit கொடுங்கள் அவ்வளவுதான்

 


அடுத்து உங்கள் Phone- க்கு உங்கள் கோரிக்கை எண் வரும் அந்த எண்னை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் .அதனை வைத்து உங்கள் கோரிக்கையின் நிலை (status) என்ன என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.


https://gdp.tn.gov.in/

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.