12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு Whatsapp வழி தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.pdf
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 12ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும்பொருட்டு 17.05.2021 முதல் 29.06.2021 வரை மாணவர்களுக்கு தேர்வு வைக்க அட்டவணை வெளியீடு:எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான அறிவுரைகள்
தேர்வு
நடைபெற வேண்டிய வழிமுறைகள்
:
ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் உள்ளடங்கிய தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும் .
* மாணவர்களுக்கு தனியாகவும் , மாணவிகளுக்கு தனியாகவும் தனித்தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும் . தேர்வு நடைபெறும் அன்று காலை 9.50 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும் .
* மாணவர்களை
மடிக்கணினிகள் / கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம்
செய்து தனித்தாளில் விடைகளை எழுத அறிவுறுத்துதல்
வேண்டும் . விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர்
பெயர் , பதிவு எண் ( அரசுத்தேர்வுத்
துறையால் வழங்கப்பட்ட எண் ) , பாடம் மற்றும்
நாள் ஆகிய விவரங்கள் மாணவரால்
எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
* அனைத்து
விடைகளையும் எழுதிய பின்பு இறுதியில்
மாணவர் கையொப்பம் மற்றும் பெற்றோர் பாதுகாவலர்
கையொப்பம் பெறுதல் வேண்டும் .
* எழுதப்பட்ட விடைத்தாட்களை Adobe Scan App மூலம் படம் பிடித்து , Pdf கோப்பாக Whats app மூலம் பாட ஆசிரியர்களுக்கு அனுப்புதல் வேண்டும் . மாணவர்கள் விடைத்தாட்களை image file ஆக அனுப்புவதை தவிர்க்க வேண்டும் .
* எழுதப்பட்ட
விடைத்தாட்களை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
* பாட ஆசிரியர் Whats app மூலம் பெறப்பட்ட விடைத்தாட்களை
Whats app- யிலேயே திருத்தம் செய்து உரிய மதிப்பெண்களை
Whats app- யிலேயே Type செய்தல் வேண்டும்.
* Whats app - ல்
திருத்தப்பட்ட விடைத்தாட்களை மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும்
. பயன்படுத்தப்படும் இந்த Whats app Group -ல் வினாத்தாட்கள் மற்றும்
விடைத்தாட்கள் மட்டுமே இருத்தல் வேண்டும்
. பயன்படுத்தப்படும் இந்த Whats app Group -ல் பள்ளியின் படம்
, ஆசிரியர் படம் , தலைமையாசிரியரின் படம்
, மாணவர் படம் , பெற்றோர் படம்
போன்ற எந்த ஒரு படங்களும்
கண்டிப்பாக இடம் பெறுதல் கூடாது.
* மேலும்
, வேறு செய்திகள் , வீடியோக்கள் போன்ற பதிவுகள் கண்டிப்பாக
இடம் பெறுதல் கூடாது. இதனை
தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.
* ஒவ்வொரு நாளும் தேர்வு முடிவுற்றவுடன் மாணவர் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியருக்கு விடைத்தாள் / நோட்டில் தேர்வு எழுதிய பக்கத்தினை படம் பிடித்து , Pdf ( Adobe Scan App மூலம் ) ஆக மாற்றம் செய்து Whats app மூலம்
அனுப்பப்பட வேண்டும் . மாணவர்கள் தேர்வுகளை நோட்டிலோ மற்றும் தாளிலோ எழுதி
அதனை பாட வாரியாக அடுக்கி
மாணவர்களை பள்ளிக்கு நேரிடையாக வருகை புரிய அரசு
அறிவிக்கும் நாளில் இந்நோட்டினை / விடைத்தாளினை
ஆசிரியரிடம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
No comments
Post a Comment