தேர்தல் பணியில் எதை யார் எப்படி செய்யப்போறோம்? : பருந்துப் பார்வை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, April 5, 2021

தேர்தல் பணியில் எதை யார் எப்படி செய்யப்போறோம்? : பருந்துப் பார்வை

தேர்தல் பணியில் எதை யார் எப்படி செய்யப்போறோம்? : பருந்துப் பார்வை

 

🏼செல்வ.ரஞ்சித் குமார்

 

உங்களின் உடல் - பொருள் - ஆவி என அனைத்தையும் பயன்படுத்தி, மக்களாட்சி தழைக்க வாக்குப்பதிவை நடத்தவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வணக்கம்.

 

தேர்தல் பணி தொடர்பா எண்ணற்ற பதிவுகள் வந்திருக்கும் அதன் சுருக்கமான பருந்துப் பார்வையே இப்பதிவு.

 

வாக்குப்பதிவுப் பொருள்களின் பட்டியலுடன் ஒப்பிட்டு தேவையானவற்றை மண்டல அலுவலரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 

தேர்தல் முடிவுற்றபின் எதையெதை எதனுடன் எதில் வைத்து எப்படித் தர வேண்டும் என்ற விபரத்தையும் மண்டல அலுவலரிடம் முன்னரே கேட்டுத் தெளிந்து கொண்டால் இறுதி நேர நெருக்கடி & நேர விரயத்தைத் தவிர்க்கலாம். அவர் ஏதும் சொல்லவில்லையெனில் இதன் இறுதியில் அதுகுறித்து உள்ளது.

 

தேவைப்படும் எண்ணிக்கைக்கேற்ப உறைகள் இல்லையெனில் முன்னரே தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

 

BU - VVPAT - CU இணைத்து சோதித்துப் பார்த்துவிட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

படிவங்களை முகவர் சான்று, Mock Poll சான்று, தேர்தல் துவக்க உறுதிமொழி, முடிவு அறிக்கை, தலைமை அலுவலர் அறிக்கை என்ற வரிசையில் அடுக்கி தேவையான முன் விபரங்களை நிரப்பிக் கொள்ளுங்கள்.

 

ஏப்ரல்.6. அதிகாலை 6:00 மணிக்கு நீங்க முகக்கவசம், கையுறை மாட்டிக்கிட்டு முகவர்களை வரவழைத்து அவர்களுக்கும் கொடுத்து Mock Poll நடத்தவும். வேட்பாளர் எண்ணிக்கையைப் பொறுத்து 50+ வாக்குகள் வருமாறு பிரித்து மாதிரி வாக்குப்பதிவு நடத்துங்கள். Result காண்பித்து Mock Poll சான்றில் முகவர்களின் கையொப்பம் பெற்று நிறைவு செய்யுங்கள்.

 

VVPAT-ல் விழுந்த சீட்டுகளைக் கட்டி Black Cover-ல் வைத்து முத்திரையிட்டு, PRO & Agents sign பெற்று Plastic Box-ல் வைக்கவும். பின் VVPAT-ல் Address Tag கட்டி முத்திரையிடவும்.

 

CU-வை Grean paper seal, Special Tag & Strip Seal கொண்டு எவ்வாறு முத்திரையிடுவது என்பதை வீடியோவில் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

அதில் Special Tag குறித்து இல்லை. அதை எப்படிப் பயன்படுத்துவதெனப் பார்ப்போம். Special  tag-ல் Control unit ன் வரிசை எண்ணை குறித்து அதன் பின்புறம் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கையொப்பம் இட்டு முகவர்களின் ஒப்பத்தினையும் பெற்று Special tag-ன்  வரிசை எண்ணை முகவர்களையும் குறித்துக்கொள்ள சொல்லவும். நீங்களும் குறித்துக் கொள்ளுங்கள். பின் result section inner cover-ல் உள்ள துளையில் தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்பட்ட நூலினை நுழைத்து அதில் Special Tag- பொறுத்தி  அதில் அரக்கு முத்திரை வைக்கவேண்டும்.

 

பின்னர் outer cover மூடி வீடியோவில் உள்ளபடி Grean paper seal & Strip Seal- ஒட்டவும். நூல் கொண்டு  address tag கட்டி அரக்கு முத்திரை இடவும்.

 

இனி சரியாக 7:00 மணிக்கு வாக்குப்பதிவு உறுதிமொழியை வாசித்துவிட்டு வாக்குப்பதிவைத் தொடங்குங்கள்.

 

P.O 1 :

 

தேர்தல் ஆணையம் கூறியுள்ள அடையாள ஆவணங்களுள் ஒன்றின் வழி வாக்காளரை உறுதி செய்துவிட்டு, Marked copy of electoral roll-ல் ஆண் எனில் நீலநிறப் பேனாவால் வரிசை எண்ணை   வட்டமிட்டு பெயரை அடிக்கோடிடவும். பெண் எனில் சிவப்பு நிறப் பேனாவால் வரிசை எண்ணை   மட்டும் வட்டமிடவும்.

 

அடையாள ஆவணங்கள் :

1) வாக்காளர் அடையாள அட்டை - EP

2) ஆதார் கார்டு - AC

3) பாஸ்போர்ட் - PP

4) டிரைவிங் லைசன்ஸ் - DL

5) பணியாளர் அடையாள அட்டை  - SID

6) பேங்க் பாஸ்புக் - BP

7) பான் கார்டு - PC

8) தேசிய ஸ்மார்ட் கார்டு - NSC

9) MGNREGA அட்டை - MC

10) Health Insurance கார்டு - HIC

11) பென்ஷன் ஆவணம் - PA

12) MP/MLA/ MLC கார்டு - OID

 

P.O 2 :

இடது கை ஆள்காட்டி விரலில் அழியா மை இட்டு, 17-A register - ல் வாக்காளரின் வரிசை எண், வாக்காளர் தரும் அடையாள ஆவணத்தின் சுருக்கக் குறியுடன் அந்த ஆவணத்தின் கடைசி 4 எண்களைக் குறித்து வாக்காளரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு Voter slip- வாக்காளரிடம் கொடுக்கவும்.

 

P.O 3 :

 

வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit-ல் உள்ள Ballot பட்டனை அழுத்தவும். வாக்காளர் வாக்களிக்கையில் எழும் Beep ஒலியை உறுதி செய்து கொள்ளவும்.

 

வாக்குப்பதிவு முடியும்போது, வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் CU-ன் Close பொத்தானை அழுத்தி, திரையில் தோன்றும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையினை படிவம் 17C வரிசை எண் 6-ல் குறிக்க வேண்டும். CU-வை off செய்து VVPAT & BU இணைப்புகளை துண்டித்து உரிய பெட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். மண்டல அலுவலர் படிவங்களை சரிபார்த்தபின் பெட்டிகளைச் சீல் வைத்தால் போதுமானது. வாக்குப்பதிவு நிறைவுப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

 

சில வகையான வாக்குகள் விபரம் :

 

ASD Voters : வாக்காளர் பட்டியலுடன் வழங்கப்பட்டிருக்கும் ASD (Absentee, Shifted & Death electors) பட்டியலில் உள்ள நபர் வாக்களிக்க வந்தால் முகவர்களுக்கும் தெரிவித்துவிட்டு அவரின் அடையாள ஆவணங்களை PRO சரிபார்க்க வேண்டும். P.O-2 ASD வாக்காளரிடம் 17A பதிவேட்டில் ஒப்பத்துடன் கைரேகையினையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும். கையேட்டில் Annexure-16-ல் உள்ள உறுதிமொழிப் படிவம் பூர்த்தி செய்து அவரை வீடியோ / புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தப்பட வேண்டும். இதை Micro Observer கண்காணித்து அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

 

Proxy vote : இராணுவத்தினர் பதிலாள் வழியாக வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம். இவர்கள் விபரம் CSV (Classified Service Voters) பட்டியலில் இருக்கும். பதிலாள் வாக்களிக்கும் போது அவரது இடது கை  நடுவிரலில் மை வைக்க வேண்டும். Marked copy of electoral Roll-லிலும் PV என குறிப்பிட வேண்டும்.

 

49 N : வாக்காளர் சின்னங்களை  பிரித்தறிய இயலாதவர் / பட்டனை அழுத்துவதற்கு இயலாதவர் தான் என்பதில் PRO திருப்தி அடைந்தால் அவரோடு 18 வயது நிரம்பிய வேறாருவரை வாக்களிக்கத் துணையாக அனுமதிக்கலாம். இவ்வாறு துணையாக வருபவருக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி. அவரின் வலது ஆள்காட்டி விரலில் மை வைக்க வேண்டும். இவ்விபரம் படிவம் 14-Aல் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமற்ற உறைகளில் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

 

49-0 : மை வைத்தபின் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று வாக்காளர் அறிவித்தால் P.O-2 தனது 17-A Remarks-ல் 49-0 : Refused to Vote என்று எழுதி வாக்காளரிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ளவும். இதன் மொத்த எண்ணிக்கையை 17C-ல் வரிசை எண் 3-ல் குறிப்பிட வேண்டும்.

 

49-M : மை வைத்தபின் யாருக்கு வாக்களிக்கப் போகிறேனென வாக்காளர்  சொன்னால் அவரை PRO வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. P.O-2 தனது 17-A Remarks-ல் 49-M : Not allowed to Vote என்று எழுதி PRO-வின் முழு ஒப்பம் பெற வேண்டும். இதன் மொத்த எண்ணிக்கையை 17C-ல் வரிசை எண் 4-ல் குறிப்பிட வேண்டும்.

 

49-MA : வாக்களிக்கையில் BU-வில் ஒரு சின்னமும் VVPAT-ல் வேறு சின்னமும் வந்தது என வாக்காளர் புகாரளித்தால், PRO அவரை அழைத்து Testing Vote வழங்கலாம். அதற்கு முன் இது தவறான புகாரெனத் தெரிந்தால் உடன் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதை விளக்கவும். அதன்பின்னும் அவர் சரி என்றால், 49 MA படிவத்தில் அந்நபரின் விபரங்களை PRO நிரப்பி P.O-2 தனது 17-A register-ல் அந்நபரின் விபரங்களை அடுத்த வரிசை எண்ணில் மிண்டும் குறித்து கையொப்பம் பெற்று Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவும். Polling agents & காவலரை அழைத்து அந்நபரை மீண்டும் வாக்களிக்கச் செய்து புகார் நிரூபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும். இதன் மொத்த எண்ணிக்கையை 17C-ல் வரிசை எண் 5-ல் குறிப்பிட வேண்டும்.

 

Challenged Vote : வாக்காளரின் உண்மைத் தன்மையினை முகவர் ஆட்சேபித்தால் ரூ.2/- வைப்புத் தொகையாகப் பெற்று ரசீது வழங்கிவிட்டு (Annexure 8) PRO படிவம் 14-ல் விபரங்களைப் பதிவு செய்து வாக்காளரின் இடது பெருவிரல் ரேகையினைப் பெற வேண்டும். (மறுப்பாராயின் அவரை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது.) ஆட்சேபனை தெரிவித்த முகவரை அதனை நிரூபிக்கக்கூற, முகவரின் பதிலில் உரிய முகாந்திரம் இல்லை எனில் வைப்புத்தொகை ரூ 2/- பறிமுதல் செய்து அதைப் படிவம் 14-ல் பதிவு செய்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்கலாம். ஆட்சேபனை உறுதி செய்யப்பட்டால் Complaint Letter- நிரப்பி அவரை காவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

49 P - Tendered vote : வாக்களிக்க வருபவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பின், அவர் முன்னதாக வாக்களிக்கவில்லை எனில் அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து அவரை வாக்குச் சீட்டு வழி வாக்களிக்க வைக்கலாம். இதன் எண்ணிக்கை 17C-ல் வரிசை எண் 8 & 9-ல் குறிக்கப்பட வேண்டும்.

 

தேர்தல் படிவங்களை முத்திரையிடல் :

 

17C, வாக்குப்பதிவு துவங்கும் முன், வாக்குப்பதிவின் போது & வாக்குப்பதிவு முடிந்த பின் PRO வழங்கும் உறுதி மொழி, PRO நாட்குறிப்பு, Visit Sheet & 16 Point Micro-observer report, வாக்குச்சாவடிக்கான பிரித்தறி ரப்பர் சீல் உள்ளிட்டவற்றை உரிய Cover-ல் வைத்த பின் சீலிட வேண்டிய அவசியம் இல்லை. இவை வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்கு எண்ணும் மையத்தில் தனியாக ஒப்படைக்கப்படும். இவை தவிர்த்து மற்றவற்றை பச்சை, மஞ்சள் பழுப்பு நிற உறைகளில் பிரித்து வைத்து வழங்க வேண்டும்.

 

பச்சை நிற உறை - Statutory cover :

 

தனித்தனி உறையிட்டு அரக்கு சீல் வைக்கப்பட்ட Marked copy of electoral roll, 17A, Voters slip, பயன்படுத்தாத Tendered ballot paper, பயன்படுத்தப்பட்ட Tendered ballot paper & 17B கொண்ட உறை. இவை அனைத்தும் அடங்கிய உறைக்கும் அரக்கு சீல் வைக்க வேண்டும்.

 

*மஞ்சள் உறை - Non Statutory cover :

 

தனித்தனி உறையிலிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் பிற பார்வை நகல்கள், முகவர் நியமனக்கடிதம், தேர்தல் பணிச்சான்று, படிவம் 14 List of Challenged votes அடங்கிய உறை, Challenged vote க்கான ரசீது புத்தகங்கள், பார்வையற்ற மற்றும் நலிவடைந்தோருடன்  உடன் வருபவர் வழங்கிய உறுதி மொழி படிவம் 14A, வாக்காளரின் வயது குறித்த உறுதிமொழி, பயன்படுத்தப்படாத & சேதமடைந்த Paper seal, பயன்படுத்தப்படாத Voters slip, பயன்படுத்தப்படாத & சேதமடைந்த  Special tag, பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த strip seal அடங்கிய உறை.

 

பழுப்பு நிற உறை :

 

PRO கையேடு, Manual of EVM & VVPAT, அழியாதமை & குப்பி, Self inking pad, Metal seal, Aero cross mark rubber stamp & இதர பொருட்கள்.

 

தனித்தனி உறைகளிலிட்டு முத்திரையிடும் இனங்களில் வேட்பாளர் முத்திரையைப் பதிக்கவும் அனுமதிக்கலாம்.

 

இணைப்பு : வீடியோ & நிரப்பப்பட்ட மாதிரிப்படிவம்.

CLICK HERE TO VIEW THE ALL VIDEOS


📌HOW TO FILL ALL ELECTION FORMS | STEP BY STEP 


தேர்தல் படிவங்கள் பூர்த்தி செய்யும் வழிமுறைகள் 


https://tamnewsteachers.blogspot.com/2021/04/how-to-fill-all-election-forms-step-by.html?m=1


📌PROCEEDING OFFICER DAIRY- எளிமையாக பூர்த்தி செய்வது எப்படி ?


https://tamnewsteachers.blogspot.com/2021/04/proceeding-officer-dairy.html


📌Pre-filled Forms for Training Purpose


https://tamnewsteachers.blogspot.com/2021/04/pre-filled-forms-for-training-purpose.html



📌PO DUTIES- வரிசைப்படி


https://tamnewsteachers.blogspot.com/2021/03/pro-duties.html


📌Presiding offer Diary - Filled Mode Copy


https://tamnewsteachers.blogspot.com/2021/03/presiding-offer-diary-filled-mode-copy_21.html#more


📌தேர்தல் 2021 - PO - களுக்கு தேவையான பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து படிவங்கள்


https://tamnewsteachers.blogspot.com/2021/03/2021-po.html


📌Election - All Type Forms...

https://tamnewsteachers.blogspot.com/2021/03/election-all-type-forms.html

(நன்றி : மு.வீரகடம்ப கோபு - வீடியோ & நிரப்பப்பட்ட மாதிரிப்படிவத்தை வெளியிட்ட அன்பர்)

No comments: