Header Ads

Header ADS

மாணவனை அழைத்து பாராட்டி சிறப்பித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்!

மாணவனை அழைத்து பாராட்டி சிறப்பித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்!

 

📗📗அரசுப்பள்ளி மாணவனை பாராட்டி வாழ்த்திய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி ஐயா அவர்களும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும்!

 

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனான A.ரியாஸ் முகமது எனும் மாணவன் இந்த  ஊரடங்கு காலத்தில் பயனுள்ள வகையில் தன்னால் இயன்ற அளவு low-cost material மூலம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை  தனக்கென்று உருவாக்கி அதனை அறிவியல் அரட்டை என்னும் YouTube channel ல் பதிவேற்றம் செய்து வருகின்றார்.அந்த நிகழ்வு நமது மாவட்ட ஆட்சியர் அவர்களும் கண்டுவந்துள்ளார். பின்னர் ஆட்சியர் அவர்களே தொலைபேசி வாயிலாக ஆட்சியர் அலுவலகத்திற்கு அம் மாணவன் A.ரியாஸ் முகமதுவை வரவழைத்து மாணவனின் கண்டுபிடிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வைத்தும் தயாரித்து விதம் மற்றும் இப்பொருள்களாலீ சமுதாயத்திற்கு அதனால் ஏற்படும் பயன்கள் ஆகியவற்றை கேட்டு..... மாணவன் வழங்கிய பதிலைக் கண்டு வியந்து பின் பாராட்டி வாழ்த்தி சிறப்பித்தார்.உடன் மாவட்ட கல்வி அலுவலர் ஐயா அவர்களும் கலந்து கொண்டது மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தியது.

 


(அப்போது தானும் மாணவனின் Channel Subscribe செய்துள்ளதை ஆட்சியர் கூறும்போது மாணவனுக்கு கண்கள் குளமானது)

 

https://youtube.com/channel/UCGAhowDFyrtgjQGrRWaVqnA

 

தற்போதைய தேர்தல் பணிப்பளு நேரத்தில் மாணவனுக்காக நேரம் ஒதுக்கி மாணவனின் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் போற்றும் விதமாக வாழ்த்துக்களையும் வழங்கி சிறப்பித்தமைக்கு மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி IAS ஐயா அவர்களுக்கும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கும் மாணவன் சார்பாக நன்றிகள் பல கோடி!

 


எனது மகன் ஆட்சியரிடம் பாராட்டுதலையும் வெகுமதியுடன் வாழ்த்துக்களையும்  பெற்றதைக்கண்டு எனக்கும் மகிழ்ச்சியே!

 

இப்படிக்கு.

அப்துல் ரஷீத்.

இடைநிலை ஆசிரியர்.

விழுப்புரம் மாவட்டம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.