6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போது பள்ளிகள் திறக்கும் சூழல் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்
🛑 இன்றைய சூழ்நிலையில்
6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போது 98.5 மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றன என
அவர் தெரிவித்தார்.
🛑6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும்
டேப் வழங்கப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது
அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக
கடந்த ஆண்டு மார்ச் 24-ம்
தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள்
அனைத்தும் மூடப்பட்டது. பின்னர், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால்
9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
தேர்வு நடைபெறாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது .
🛑 பின்னர், நடப்புக்
கல்வியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள்
நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின்
நலன்கருதி இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு
வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு 40% பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.
🛑 இதைதொடர்ந்து 6,7, 8-ம்
வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால்,
6 முதல் 8-ம் வகுப்பு வரை
மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்கப்படுமா என தகவல் வெளியான
நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என
தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment