TRB - போட்டித்தேர்வு மூலமாகவே இனி ( SGT / BT ) ஆசிரியர் பணி மற்றும் TET சான்றிதழ் காலம் நீட்டிப்பா ? CM CELL Reply.
அய்யா வணக்கம்.நான் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 0.11 வெயிட்டேஜ் வித்தியாசத்தில் பணி வாய்ப்பினை இழந்தவன்.எங்களுக்கு பணி வழங்குவதாக ஒரு நான்கைந்து ஆண்டுகளாக தினந்தோறும் அறிக்கை விட்டு எங்களை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியிலே வைத்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அய்யா திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவ்த்துக்கொள்கிறோம்.அய்யா அவ்வாறு சொல்லாமல் இருந்திருந்தால் நான் கூட தற்கொலை செய்திருப்பேன் . இன்றைய தேதி வரையிலும் நாங்கள் உயிரோடு இருப்பதற்கு அய்யா அவர்களே காரணம்.எங்களுக்கு அடுத்து அமையவிருக்கும் தி.மு.க. ஆட்சியில் 80000 தகுதிதேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பணி வழங்கப்படும் என்ற உறுதியினை மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.ஆனால் எங்களது தகுதித்தேர்வு சான்றிதழ் காலாவதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.காலாவதியான தகுதிதேர்வு சான்றிதழை வைத்து எப்படி பணி வழங்குவார்கள் எனத் தெரியவில்லை.ஆகவே எங்களது தகுதிதேர்வு சான்றிதழின் கடைசி நாள் எது என்பதைத் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நிராகரிக்கப்பட்டது . ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையிலுள்ள விதிகளின்படியே தெரிவு பணிகளை மேற்கொள்ளுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் படி SGT / BT பணித்தெரிவு போட்டித் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் தற்போது உள்ள அரசாணையின்படி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். எனினும் சான்றிதழ் தகுதி சார்ந்து வேறு அரசாணை வெளியிடப்படின் உரிய தகவல் இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும் கனிவுடன் தெரிவிக்கலாகிறது . ஆதேவா.ஓ.மு.எண் 5305.இ 4.2020 , நாள் : 31.10.2020
No comments
Post a Comment