தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, November 3, 2020

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு?

       



தமிழகத்தில், உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கான எழுத்து தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. இந்த தேர்வுக்கு பிறகு, வெளியான தேர்வு முடிவுகளில் தொடர்ந்து பல்வேறு குழப்பம்,  குளறுபடி நீடித்தன. இதன் காரணமாக மூன்று ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது, இந்த இறுதிப் பட்டியலில் முறைகேடு நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேலைவாய்ப்பு முன்னுரிமை மதிப்பெண்கள் 1, 2 மற்றும் பூஜ்ஜியம் என்று பெற்றிருந்த நிலையில், 18 க்கும் மேற்பட்டோர் முழுமையான 

மதிப்பெண்களை பெற்று, தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதாவது ஐந்துக்கு ஐந்து என மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் காரணமாக இதில் பல முறைகேடு நடந்து இருக்கலாம் என்றும், அதிகாரிகள் துணையில்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தேர்வர்களும், பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதன் பிறகே பணி நியமன கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நிலையில், வெளியான இந்த தகவல் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

No comments: