Header Ads

Header ADS

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய முடிவு!










6 மாத காலத்துக்குப் பின் மீண்டும் பள்ளிகளை திறக்கும் தேதியை முடிவு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும்  நிலையில், ஆன்லைன் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வரும் 21-ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து பாடம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகளை எப்போது திறப்பது? என்பது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குநர்கள் கண்ணப்பன், உஷா ராணி, பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனையில், பள்ளிகளைத் திறக்கும் தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்திருப்பதாகவும், தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடன், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.