Minority/Non- Minority என்ற பாகுபாடு இல்லாமல் TET நிபந்தனைகளிலிருந்து பணியில் உள்ள AIDED ஆசிரியர்களுக்கு விலக்கு கோரி, தமிழக - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு கடிதம்
அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற ( Non Minority ) பள்ளிகளில் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் , ஆண்டுக்கு ஆண்டு சிறந்த தேர்ச்சி அளித்து வரும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு என்ற சிக்கலில் தவித்து வருகின்றார்கள். பலருக்கு இதன் காரணமாக ஆண்டு ஊதிய உயர்வு மறுக்கப்பட்ட நிலையிலும் , கடுமையான மன உளைச்சலிலும் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
கட்டாய கல்வி சட்டம் அமல் படுத்தப்பட்ட 23.08.2010 முதல் தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் மற்றும் தகுதி தேர்வு கட்டாயமாக்குதல் என்ற தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியான நாளான 16.11.2012 வரை நியமனம் பெற்று அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் ( Minority ) ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனையுடன் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு , தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க. எண் 3416 191 / நாள் : 01.03.2013 மூலம் 10 நாட்கள் புத்தாக்க பயிற்சி அளித்து ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது . இதே காலகட்டத்தில் தமிழக அரசு பள்ளிகளில் ( Government ) பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) அவர்களின் செயல்முறைகள் ந.க. எண் 19850 | C / 5 / இ 2 / 2014 நாள் : 08.11.2017 மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் ( Government ) நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு உதவி பெறும் சிறுபான்மை ( Minority ) பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களைப்போன்று அதே காலகட்டத்தில் பணி நியமனம் பெற்றுள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற ( Non Minority ) பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 1500 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காத்திடும் பொருட்டு , ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) எழுதுவதிலிருந்து விலக்களிக்க , அம்மாவின் அரசை சிறப்புடன் தலைமையேற்று நடத்திவரும் தமிழக முதல்வராகிய தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
No comments
Post a Comment