Header Ads

Header ADS

கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடத்தப்படுமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு.










கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகள், கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி, பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி அறிவித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், யுஜிசி.யின் முடிவை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து, கடந்த 18ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு, இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதில், செப்டம்பரில் இறுதியாண்டு தேர்வு நடத்தப்படுமா? என்பது தெரியவரும்.






No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.