டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணம்.. வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
டெல்லி: கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிடித்த்த மின்னணு பண பரிவர்த்தனை வசூலித்த கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப தர வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேரடி பணப் பரிவர்த்தனையை தவிர்த்து மின்னணு முறையில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள மத்திய அரசு மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. வங்கிகளும் '40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுப்பதாக இருந்தால் மட்டும் வங்கிக்கு வாருங்கள் என்று சொல்வதுடன், 'ஆன்லைன்' வழியிலோ ஏ.டி.எம். மையங்களிலோ மேற்கொள்ளுங்கள்' என அறிவுறுத்தி அனுப்புகின்றன.
ஆனால் இன்டர்நெட் மூலம் மேற்கொள்ளப்படும் மின்னணு பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன. குறிப்பிட்ட பரிவர்த்தனை வரை இலவசம் என்று அறிவித்த வங்கிகள், அதன்பிறகான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. 6 மாதத்திற்கு 90 பரிவர்த்தனைகள் வரை வங்கிகள் இலவசமாக அனுமதிக்கின்றன. அதன்பிறகு கட்டணம் விதிக்கின்றன. இதனிடையே யுபிஐ பயன்படுத்துவதற்கும் கட்டணங்கள் வசூலித்து வருகின்றன வங்கிகள்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிடித்த மின்னணு பண பரிவர்த்தனை கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப தர வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூபே கார்டு மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
No comments
Post a Comment