Header Ads

Header ADS

இன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீடு-.30.08.2020-












தமிழகத்தில் மேலும் 6,352 பேருக்கு கொரோனா'

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

- சுகாதாரத்துறை



தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மாவட்டங்களுக்குள் பொதுபோக்குவரத்திற்கு அனுமதி

பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து என அறிவிப்பு

வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு -பாஸ் முறை தொடரும்

தமிழகம் முழுவதும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்க அனுமதி!

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலைவாசஸ்தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் -பாஸ் பெற்று செல்ல அனுமதி!'

அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி

வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி

சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும்

பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி

.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள்

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி.

விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது

தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை இயங்க அனுமதி.

வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும்

மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்

தமிழ்நாட்டில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும்

கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு

சினிமா ஷூட்டிங்குகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சினிமா ஷூட்டிங்குகளில் 75 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உத்தரவு

தமிழ்நாட்டில், பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை தடை தொடரும்

மாநிலங்களுக்கு இடையே, அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும், ரயில்களை இயக்க அனுமதி

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை விரைவில் அறிவிப்பு

சென்னை விமான நிலையத்தில், வெளிமாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதி

சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில், தற்போதுள்ள நடைமுறையே தொடரும்
                      

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.