மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்த - புதிய முயற்சி
R.GOPINATH THIRUVALLUR DISTRICT
மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்த பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் மகிழ்ச்சி...
ஒவ்வொரு பாடங்களில் இருந்தும் 20 வார்த்தைகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வீட்டிலிருந்தே படிப்பதற்கு ஒரு வார்த்தையை தொடும் பொழுது அது என்ன வார்த்தை அதை எவ்வாறு படிக்க வேண்டும் என்பதற்கான மொபைல் செயலி தயாரித்து மாணவர்கள் வீட்டுக்கு சென்று கொடுத்து மாணவர்களை படிப்பதில் கற்பித்தலில் கற்றலில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சி.......
Click to download
மொபைல் phone இல்லாதவர்களுக்கு பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு வழங்கி வருகிறேன்......
தன் மாணவர்கள் மட்டுமன்றி அனைத்து மாணவர்களும் பயன் பெற வேண்டி தன் பயிற்சி வளங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகிறேன்
இந்த ஊரடங்கு
காலத்தில் என் மாணவர்களை வகுப்பறையில் மட்டுமே சந்திக்க முடியவில்லை. அவரது பயிற்சித் தாள்கள் செயலிகள் மூலம் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்...
ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படிப்பதற்கும், அவற்றை கற்றபின் தேர்வு எழுதுவதற்கும் இணையவழித்தேர்வுகளை இருவகை பயிற்றுமொழி களுக்கும் தயாரித்து மாணவர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
இந்த இணையத் தேர்வுகளின் முக்கிய அம்சம் தேர்வு எழுதி முடித்தவுடன் மாணவர்களுக்கு தேர்வில் பெற்ற மதிப்பெண் களுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மாணவனிடம் கற்கும் ஆர்வம் மேலோங்கி காணப்படுகிறது. வகுப்பறையில் கற்றலை மிகவும் மகிழ்ச்சிகரமாக மற்றும் விளையாட்டு உணர்வுடன் கொண்டு செல்வதற்காக ஆசிரியர்களுக்கு இணைய வழி வகுப்புகளின் மூலம் பயிற்சிகளை வழங்கப்படுகிறது.
மாணவர்கள் எளிதில் உபயோகிக்கும் வகையில் மொபைல் செயலிகளை வடிவமைத்து மாணவர்களின் கற்றல் மேம்பட மிகவும் உதவிகரமாக இருப்பதில் மகிழ்ச்சி...
மாணவர்களுக்கு அடிப்படைக் கணிதத்தில் ஆர்வத்தை உண்டாக்கவும், எளிமையாக்கவும் பொருட்டு 36 பக்கங்கள் கொண்ட கணித பயிற்சி தாள்களை உருவாக்கி அதனை வாட்ஸ்அப் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் அனைவருக்கும் பகிர்ந்து வருகிறார்.
நீங்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
ஊரடங்கு காலத்தில் மொபைல் செயலிகளை பயன்படுத்த இயலாத மாணவர்களுக்கு நேரில் சென்று பயிற்சிகளையும் கற்றல்-கற்பித்தல் துணைக் கருவிகளை மாணவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
நான்காம் வகுப்பு முழுமைக்கும் ஆன்-லைன் வழி தேர்வுகளை தயாரித்து பயன்படுத்தி வருகிறோம்...
No comments
Post a Comment