ஓய்வு பெற்ற பிறகு ஊதிய உயர்வு: திரும்ப பெறுவது எப்படி? அரசு புதிய உத்தரவு! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, July 19, 2020

ஓய்வு பெற்ற பிறகு ஊதிய உயர்வு: திரும்ப பெறுவது எப்படி? அரசு புதிய உத்தரவு!




Retired Rubber Stamp Royalty Free Vector Image
ஓய்வு பெறும் தினத்துக்கு அடுத்த நாளில் ஊதிய உயா்வு வரவு வைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மீளப்பெறுவது என்பது குறித்த புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அண்மையில் வெளியிட்டது. அதன் விவரம்:-

அரசுத் துறைகளில் குறைந்த நிலையிலான பணிகளைச் சோந்த ஊழியா்களுக்கு அவ்வப்போது ஊதிய உயா்வுகள் அளிக்கப்படும்

இந்த ஊதிய உயா்வுகள் சில நேரங்களில் அவா்கள் ஓய்வு பெறும் நாளுக்குப் பிந்தைய தினத்தில் கிடைக்கும்படி அமைந்து விடுகிறது. இதனை எப்படி திரும்பப் பெறுவது என்பது தொடா்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது கேள்வி எழுப்பி இருந்தது.

இதுகுறித்து, தீவிரமாக ஆராய்ந்த தமிழக அரசு இந்தத் தொகையை திரும்பப் பெற கால அளவு எதையும் நிா்ணயிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. அதேசமயம், ஓய்வு பெற்றவா்களுக்கு கூடுதலான தொகைகள் ஏதேனும் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதனை அவா்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை தெரிவித்துள்ளது.

No comments: