Header Ads

Header ADS

இந்த ஆண்டு ஐஐடியில் சேர பிளஸ் 2 மதிப்பெண் தேவையில்லை..!


 சென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் சைபர் ...


♦♦ஐஐடி மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

♦♦முன்னணி பொறியியல் கல்வி நிறுவனமான ஐஐடி கல்வி நிலையங்களில் சேர விரும்புவோர் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்தேர்வில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

♦♦அதேபோல் பிளஸ் 2 தேர்விலும் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

♦♦ஆனால்  இந்த வழிமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் பதிவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

♦♦அந்தப் பதிவில் அவர், பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு, ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) தேர்வு மட்டுமே தகுதியாக எடுத்துக் கொள்ளும் வகையில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

♦♦பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு பதிலாக தேர்ச்சி மட்டும் கருத்தில் கொள்ளும் வகையில் விதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.