இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்?… கூகுள் மேப்பில் புதிய அம்சம் அறிமுகம்… வெளியான புது தகவல்..!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, July 12, 2020

இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்?… கூகுள் மேப்பில் புதிய அம்சம் அறிமுகம்… வெளியான புது தகவல்..!!


சபாஷ்: இனி கூகுள் மேப் செயலியில் ...



கூகுள் மேப் செயலியில் புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கியமான அம்சமாக டிராபிக் சிக்னல் குறித்த விவரத்தை விரைவில் அறிந்து கொள்ளும் அம்சத்தை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனமானது தொடர்ந்து பயனர்களுக்கான சேவையை வழங்குவதால் மக்களுக்கு அது மிகவும் உதவியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கின் நடுவில் இந்தியா 30 நகரங்களில் உணவு முகாம், இரவு தங்கும் இடம் ஆகியவற்றை கூகுள் மேப் மூலம் பார்வையிடும் வசதியை மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கு செய்து கூகுள் நிறுவனம்
உதவியுள்ளது. கூடுதல் தனியுரிமை வழங்கி பயனாளர்களின் தரவை பாதுகாப்பது என்ற முக்கிய முயற்சியை கையிலெடுத்து வெற்றி கண்டுள்ளது. கூகுள் வரைபடத்தில் எதிர்பார்க்கப்பட்ட மறைநிலை பயன்முறையை (INCONITO MODE) அறிமுகப்படுத்தி  கூகுள் மேப்ஸ் செயலியில் தேடும் இடங்களின் விபரங்கள் எதுவும் கூகுள் கணக்கிலும் ஸ்மார்ட்போன் சாதனத்திலும் சேமிக்கப்படாத வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா பரவல் தொடங்கியதன் முதல் கட்டுப்பாட்டு பகுதிகளை விரைவில் அறிந்து கொள்ளும் வகையில் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கூகுள் மேப் செயலியில் டிராபிக் சிக்னல் பற்றிய விவரத்தை விரைவில் அறிந்து கொள்ளும் புதிய அம்சம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆயினும் இதுபற்றி கூகுள் நிறுவனம் எவ்வித தகவலும் வெளியிடவில்லை. ஆண்ட்ராய்டு பற்றிய தகவல்களை வெளியிடும் ட்ராய்டுலைஃப் நிறுவனம் தான் இந்த அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.

இதன் முதற்க்கட்ட முயற்சியாக அமெரிக்க நகரங்களில் உள்ள சாலை டிராபிக் சிக்னல் விவரத்தை விரைவில் கொண்டு வரும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய புதிய அம்சத்தை கொண்ட கூகுள் வரைபடம் அமெரிக்காவில் அறிமுகம் ஆன பிறகு நாடு முழுவதுமாக படிப்படியாக கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் எந்தப் பகுதியில் டிராபிக் உள்ளதோ அது நமக்கு சிவப்பு 
வண்ணத்தில் காட்டும்.. தற்போது இது அறிமுகமானால்  டிராபிக் சிக்னல் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பயனர்களுக்கு காட்டும் வகையில் வெளியாக உள்ளது.

No comments: