எந்த மொபைலாக இருந்தாலும்…. 3 நிமிடத்தில் முழு சார்ஜ்…. அட்டகாச படைப்பு….!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, July 12, 2020

எந்த மொபைலாக இருந்தாலும்…. 3 நிமிடத்தில் முழு சார்ஜ்…. அட்டகாச படைப்பு….!!



50w OPPO Super VOOC charger, Mobile Phones & Tablets, Mobile ...
அனைத்து மொபைல்களும் இனி மூன்றே நிமிடத்தில் சார்ஜ் ஏறும் விதமாக புதிய சார்ஜர் ஒன்றை ரியல்மீ நிறுவனம் வெளியிட உள்ளது.
தற்போது மொபைல் உலகில் போட்டிகள் ஏராளம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது மொபைலில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வந்து அதை புதிய மொபைலாக வெளியிட்டு மக்களிடம் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அடிக்கடி அப்டேட் செய்வதன் மூலம் மட்டுமே நாம் நிலைத்து நிற்க முடியும் என்பதை உணர்ந்த நிறுவனங்கள் இவ்வாறு செய்கின்றனர். சரி மொபைலோடு நிறுத்தி விட்டார்களா என்று கேட்டால் கட்டாயம் இல்லை. ரியல் மீ நிறுவனம் இதற்கு ஒருபடி மேலாகச் சென்று வயர்லெஸ் புளூடூத், போன் சார்ஜர், மொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட மற்ற மொபைலுக்கும் தேவையான சாதனங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
 
அந்த வகையில் தற்போது ரியல் மீ நிறுவனம் 100w பிளஸ் சார்ஜர் ஒன்றை தயாரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 120w வரை வேகம் கொண்ட இந்த சார்ஜர் மூலம் 4000+ Mah கொண்ட பேட்டரிகளை வெறும் மூன்றே நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜருக்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலையில், இம்மாத இறுதியில் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்தியாவில் விற்பனையாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: