Header Ads

Header ADS

ஜமாபந்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அவகாசம்


                                       

                                   Online Form
பொதுமக்களே ஆன்லைன் ஜமாபந்தி மூலம் விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்களே அவகாசம்


கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதால் தற்போது, மாநிலம் முழுவதும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 2019-2020 ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா தொற்றை தவிா்க்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வருவாய்த் தீா்வாய அலுவலரிடம் நேரில் அளிக்க வேண்டாம். பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை வரும் திங்கள்கிழமை (ஜூன் 29) முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை  இணையதள முகவரி மூலமாகவோ அல்லது -சேவை மையங்கள் மூலமாகவோ அனுப்பலாம். https://gdp.tn.gov.in/jamabandhi/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இணையதளம் மூலம் ஆன்லைன் ஜமாபந்தி நடைபெறுவது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் காலதாமதமாக தெரிய வந்துள்ளது என்று மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து  ஜூலை 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
 
ஆன்லைன் ஜமாபந்தி மூலம் விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்கள் மட்டும்  அவகாசம் உள்ளதாகவும் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன், விவசாயம், கால்நடை , மீன் பிடித்தல், பிறப்பு பதிவு, நுகர்பொருட்கள் வழங்கல், உழவர் பாதுகாப்பு திட்டம், கல்வி உதவி மற்றும்  புகார்கள்,  மீனவர் பிரச்சினைகள்,  நிலம் சார்ந்த பிரச்சினைகள்,  சட்டம் மற்றும் ஒழுங்கு புகார்கள், கடன் நிதி உதவி, ஊரக வளர்ச்சி துறை சார்ந்த கோரிக்கைகள்,  இயற்கை பேரிடர் சார்ந்த பிரச்சினைகள்,  சமூக நலத்திட்டங்கள் நில அபகரிப்பு சார்ந்த பிரச்சனைகள், இலவச வீட்டு மனை பட்டா வேண்டுதல், பட்டா பெயர் மாற்றம், நத்தம் வீட்டுமனை பட்டா வேண்டுதல் சார்ந்த கோரிக்கைகளுக்கு  ஆன்லைன் ஜமாபந்தி மூலம் பொதுமக்கள், விவசாயிகள்  விண்ணப்பிக்கலாம்.

HOW TO  APPLY  IN ONLINE -DEMO VIDEO


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.