2030ஆம் ஆண்டிக்குள் அனைவருக்கும் கல்வி என்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம்!” 12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி - உயர்கல்வித்துறை செயலர் முழு விளக்கம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, July 29, 2020

2030ஆம் ஆண்டிக்குள் அனைவருக்கும் கல்வி என்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம்!” 12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி - உயர்கல்வித்துறை செயலர் முழு விளக்கம்







புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம்
   
புதிய கல்விக் கொள்கைக்க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

புதிய கல்விக் கொள்கைக்க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

*கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம்  எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.


* இடைநிற்றல் மாணவர்களைக்  கண்டறிந்து தொடர்ந்து கல்வி கற்கச் செய்ய வேண்டியது ஆசிரியர்கள் பொறுப்பு..

* மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடையவே புதிய கல்விக்கொள்கை

* உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.

* முதல் ஆண்டில்  பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

* 2 ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமலில் இருக்கும்.

* பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை   தொடரலாம்.

*15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.

*எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுவதாக புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு

*நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும்.

* கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.

தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.

* இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும்.


* பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

*கல்வி கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது


நாட்டின் உற்பத்தி மதிப்பில் 6% சதவீதம் கல்வி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை


* தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விரிவாக்கப்பட்டு சமூக அறிவியல் கள ஆய்வுகளுக்கு அனுமதி


* கல்வித் துறைக்கான புதிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு தரும்  ,  கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்



*அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்  ,  தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்

* உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் 2035 க்குள் 50% மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம்

மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே

No comments: