ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஒத்தி வைக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
கல்வியாண்டு துவங்குவது தாமதம் ஏற்படும் நிலையில் ஆசிரியர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் தரும் பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும்:-தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்!
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ கல்விமுறை செயல்பட்டு வருகிறது கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு மட்டும் பேரிடரை கருத்தில் கொண்டு 2பருவ முறையாக மாற்றியமைத்து பாடங்களையும் அதற்கேற்ற முறையில் குறைத்து திட்டமிடலாம்.
பள்ளிகள் காலதாமதமாக திறக்கின்ற காரணத்தினால் தேர்வுகளையும் அதற்கேற்ப திட்டமிட்டு அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படுமானால் காலாண்டு அரையாண்டு விடுமுறை குறைத்து தேர்வுகளை அதற்கேற்ற முறையில் அமைக்க வேண்டும்.
மாணவர்களின் கற்றல் திறனுக்கு அடிப்படையில் போதிய இடைவெளி விட்டு தேவையான அளவுக்கு பாடங்களை இந்த ஆண்டு மட்டும் குறைத்து நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே ஆண்டு முழுமைக்குமான திட்டமிடல் (Year Plan) வழங்க வேண்டும்..
Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments
Post a Comment