தமிழகம் முழுவதும் LKG, UKG வகுப்புகளுக்கும் சில மாவட்டங்களுக்கு மட்டும் 5 ஆம் வகுப்பு வரை மார்ச் 31 முடிய விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை : கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து
மழலையர் பள்ளிகள் மற்றும் குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி உள்ளிட்ட
7 மாவட்டங்களில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று மாலை நிலவரப்படி 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர்.
அதிகபட்சமாக கேரளாவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து மால்களும், தியேட்டர்களும் மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்றாலும் அண்டை மாநிலங்களில் கொரானா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மழலையர் பள்ளிகளுக்கும் நாளை முதல் மார்ச் 31 வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட கேரளாவை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கம் மார்ச் 16 முதல் மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments
Post a Comment