அரசு பள்ளிக்கு, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் திடீர் வருகை
ஸ்ரீபெரும்புதுார் அருகே, அரசு பள்ளிக்கு, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் திடீர் வருகை தத்ததால், மாணவர்கள் இன்ப அதிர்ச்சிஅடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஒரகடம் பகுதியில், டயர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்குகிறது.இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நேற்று பங்கேற்றார்.
அப்போது, தொழிற்சாலை சார்பில், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் அரசு தொடக்கப் பள்ளியில், விளையாட்டு உபககரணங்களுடன், பூங்கா அமைக்கப்பட்டிருப்பதை, அவர் அறிந்தார்.தொடர்ந்து, பூங்காவை பார்வையிட, தொழிற்சாலை நிர்வாகிகளுடன், வல்லம் அரசு பள்ளிக்கு, சச்சின் திடீரென வருகை தத்தார்.பள்ளி வளாகம், பூங்காவை பார்வையிட்ட சச்சின், மாணவர்களுடன் சேர்ந்து, குழு புகைப்படம் எடுத்துச் சென்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத மாணவ - மாணவியர், சச்சினை பார்த்து இன்ப அதிர்ச்சிஅடைந்தனர்
No comments
Post a Comment